எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை:யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கர், கோவை சிறையில் தாக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரியும், சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக் கோரியும் அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தாக்குதல் தொடர்பாக விசாரித்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சவுக்கு சங்கருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
பின்னர், அரசுத் தரப்பில், “சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிக்கையின் அடிப்படையில், சவுக்கு சங்கருக்கு மருத்துவ சிகிச்சை அவசியம். எனவே, அவருக்கு உரிய சிகிச்சை வழங்க கோவை சிறை நிர்வாகத்துக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், நேற்று அவர் புறநோயாளியாக சிகிச்சைக்கு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில், “தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி சிறைத் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க அனுமதி வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கெனவே நீதி விசாரணை நடத்தப்பட்டு விட்டதாகக் கூறி, சங்கரின் தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்தனர். மேலும், சிறையை மாற்றக் கோரி சவுக்கு சங்கரின் தாய் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்6 hours 5 sec ago |
ஆனியன் ரிங்ஸ்3 days 5 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 5 hours ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
01 Jun 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு:அரசு வாகனத்தில் அழைத்து சென்று படம் பார்க்க வைத்த வட்டாட்சியர்
01 Jun 2024கடலூர்: ‘கருடன்’ திரைப்படம் பார்க்க நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், வட்டாட்சியர் மூலம் அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று பட
-
நெல்லை – சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு பயணிகள் மகிழ்ச்சி
01 Jun 2024நெல்லை: நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரை வியாழன் தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
-
அடுத்த 120 நாட்களுக்கு பெரியார் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
01 Jun 2024கம்பம் : தமிழக அரசின் உத்தரவின்படி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போக பாசனத்திற்காக முல்லை பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
-
ஆப்கானில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
01 Jun 2024காபுல் : ஆப்கானிஸ்தானில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததுவணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
01 Jun 2024சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
-
ஜாமீன் மனு மீது வரும் 5-ம் தேதி தீர்ப்பு: இன்று மீண்டும் சிறை செல்லும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
01 Jun 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு தொடர்ந்த, வழக்கு மீதான விசாரணை ஜூன் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
உதகையில் கனமழையால் சாலையில் வெள்ளப் பெருக்கு
01 Jun 2024உதகை: நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. உதகையில் சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
-
சென்னை மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம்
01 Jun 2024சென்னை:சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் ஜூன் 3 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
01 Jun 2024புது டெல்லி: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது.
-
வெப்ப அலை: ஜூன் 3-வது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
01 Jun 2024சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஜூன் 3-வது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
ஜூன் 5-ல் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jun 2024சென்னை : ஜூன் 5-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
01 Jun 2024சென்னை:தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
295 இடங்களுக்கு மேல் இன்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கார்கே பேட்டி
01 Jun 2024புதுடெல்லி: 295 இடங்களுக்கு மேல் இன்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று இன்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தெரிவ
-
கடந்த மே மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 84.21 லட்சம் பேர் பயணம்
01 Jun 2024சென்னை:கடந்த மே மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் 84,21,072 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் வெயில்:வட மாநிலங்களில் 75 பேர் பலி
01 Jun 2024புதுடெல்லி: வட மாநிலங்களில் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு: கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு ஜாமீன்
01 Jun 2024பெங்களூரு : பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒன்றில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.
-
கேதர்நாத்-பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
01 Jun 2024கேதர்நாத் : உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தின் (மே 31) சாமி தரிசனம் செய்தார்.
-
57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு
01 Jun 2024புதுடில்லி : 57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சட்டத்தின் மீதான நம்பிக்கைக்கு சேதம்: டொனால்ட் டிரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு
01 Jun 2024நியூயார்க் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது.
-
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: மின் வாரியம்
01 Jun 2024சென்னை:தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்
-
குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவிப்பு
01 Jun 2024வாஷிங்டன் : ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
-
45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திரமோடி : திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
01 Jun 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேரமாக தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மர
-
சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
01 Jun 2024மும்பை: சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
பிரதமர் மோடியின் தியானம் பற்றி எதிர்க்கட்சிகள் விஷம அரசியல் அண்ணாமலை குற்றச்சாட்டு
01 Jun 2024தி.மலை:கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதில் எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான அரசியல் செய்கின்றன என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.