முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கோலாவில் இந்தியர்கள் தவிப்பு லோக்சபையில் எம்.பி.க்கள் கவலை

திங்கட்கிழமை, 14 மே 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 15 - அங்கோலா நாட்டில் பாஸ்போர்ட் இல்லாமலும் சம்பளம் கிடைக்காமலும் தவிக்கும் 1,200 இந்தியர்களின் அவல நிலை குறித்து  லோக்சபையில்  நேற்று எம்.பி.க்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். அங்கோலா நாட்டில் பல இந்திய இளைஞர்கள் வேலை செய்து வருகிறார்கள். கடந்த 6, 7 நாட்களாக சுமார் 1200 இந்திய இளைஞர்கள்  உணவு இல்லாமல் தெருக்களில் சுற்றி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பாராளுமன்றத்தின் லோக் சபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும்  பா.ஜ.க. வைச் சேர்ந்த  ஹரீன்பதக் என்ற உறுப்பினர் எழுந்து அங்கோலாவில்  சிக்கித் தவிக்கும் 1200 இந்திய இளைஞர்களின் அவல நிலை குறித்து பிரச்சினை கிளப்பினார். இந்த 1200 இந்தியர்களுக்கும் அவர்களது முதலாளிகள்  சம்பளம் வழங்கவில்லை என்றும்  இந்த  இந்தியர்களின் பாஸ்போர்ட்டுக்களை அந்த முதலாளிகள் பிடுங்கி வைத்துக்கொண்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன என்றும் குறிப்பிட்டார். இந்த இளைஞர்கள் தற்போது அங்கோலா நாட்டின் தெருக்களில் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். இவரது இந்த பேச்சுக்கு  இதர எம்.பி.க்கள் சிலரும் குரல் கொடுத்தனர்.  இந்த இந்தியர்களில் குஜராத்தை சேர்ந்தவர்களும்  அடங்குவர் என்று பதக் குறிப்பிட்டார்.

இந்த விஷயத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட்டு அந்த  இந்தியர்களை இந்தியாவுக்கு பத்திரமாக மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதக் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்