முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களிடமிருந்து பறிக்கப்பட்டதை மீண்டும் திருப்பிக் கொடுத்து விடுங்கள்: மெகபூபா முப்தி பேச்சு

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. 

இந்த நடவடிக்கையின் போது காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது ஜம்மு-காஷ்மீரில் நிலைமை சீரடைந்துள்ளது. 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி நேற்று ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய மெகபூபா முப்தி, 

எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டதை (காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து) மீண்டும் எங்களுக்கு திருப்பிக்கொடுக்குமாறு நாங்கள் நமது நாட்டிடம் கேட்டுக்கொள்கிறேம். உங்களுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வேண்டுமென்றால் நீங்கள் எங்கள் மரியாதையை மீண்டும் நிலை நாட்ட வேண்டும். வேறு வழியே கிடையாது. இதை நான் எனது நாட்டிடம் கூறிக்கொள்கிறேன். நான் அதை கூறும்போது பா.ஜ.க. ஏன் கோபம் அடைகிறது? பாகிஸ்தானிடமிருந்து இத நான் கேட்கலாமா? 

ஆயுதங்களை விட்டுவிட்டு பொதுவெளிக்கு வாருங்கள் என்று அசாமில் உள்ள பயங்கரவாதிகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுக்கும்போது, போடோ இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்போது அதேபோன்ற நடவடிக்கையை ஜம்மு காஷ்மீரில் செய்தவில் என்ன சிக்கல் உள்ளது சிறையை தவிர வேறு வழியே கிடையாதா? எத்தனை நாட்களுக்கு இந்த அநீதி தொடரவேண்டும்?. 

ஆயுதத்தின் மொழி யாருக்கும் புரியாது. உங்களின் கருத்தை அமைதியான முறையில் வெளிப்படுத்தினால் உலகம் உங்களை கவனித்து கேட்கும். துப்பாக்கிகளின் மொழியில் நீங்கள் பேசினால் நீங்கள் கொல்லப்படுவீர்கள், நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள். ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் துப்பாக்கியை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். அவர்கள் (அரசாங்கம்) நிச்சயம் ஒருநாள் கேட்பார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து