எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி--ஜூலை.23 - திருச்சியில் ரூ.30கோடி மதிப்புள்ள ஹோட்டலை அபகரித்து விட்டதாக முன்னாள் அமைச்சர் கே.என்நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன், அமைச்சரின் தம்பி ராமஜெயம் ஆகியோர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ள நிலையில் ஹோட்டல் தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசிய சிடி ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் நேரு கைதாக கூடும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்களில் பல்வேறு தி.மு.கவினர் தொடந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு அவரது தம்பியும் தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான மு.அன்பழகன் ஆகிய மூன்று பேர்கள் மீது ரூபாய் 30 கோடி மதிப்பிலான திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு ஹோட்டலை அபகரித்ததாக நாமக்கலைச் சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவர் திருச்சி மாநகரில் போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து திருச்சி மாநகர போலிஸ் கமிஷனர் மாசாணமுத்து உத்திரவின் பேரில் டாக்டர்.கதிர்வேல் கொடுத்த புகாருடன் அதற்கான ஆதாரங்களையும் வாங்கி போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஏற்கெனவே டாக்டர்.கதிர்வேல் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது.
கடந்த 2005 ஆம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காஞ்சனா பிளாசா ஹோட்டலை 30 கோடி மதிப்பீட்டில் நான் கிரைய ஒப்பந்தம் செய்தேன். அதை தொடர்ந்து ஹோட்டலை நானே நிர்வாகித்து வந்தேன். இந்த நிலையில் 2007ஆம் ஆண்டு திருச்சி திமுக மாநகர செயலாளர் அன்பழகன் தலைமையில் அடியாட்கள் ஆயுதங்களுடன் வந்து என்னை மிரட்டி ஹோட்டலை விட்டு அனுப்பி விட்டனர். மேலும், போலி ஆவணங்கள் தயாரித்து அந்த ஹோட்டலையும் அபகரித்து கொண்டனர். இப் பிரச்சினையில் திருச்சியில் பணியாற்றிய ஒரு போலீஸ் அதிகாரி தொடர்பு இருக்கிறது. எனவே, நான்கு பேர்கள் மீதும் நடவடிக்கை எடுத்த எனது ஹோட்டலை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். இதனிடையே முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவில் ஏற்கெனவே இது போன்று ஒரு புகாரை டாக்டர்.கதிர்வேல் திருச்சி போலீசில் கொடுத்திருந்தார். அதனை விசாரித்த காவல் துறையினர் அந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை என்று புகாரை முடிவுக்கு வந்தனர். மீண்டும் அதே குற்றச்சாட்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பொய் புகார் எனவே எங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கே.என்.நேரு, அன்பழகன் ஆகியோர் கூறியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க கே.என்.நேரு, தொழிலதிபர் கே.என்.ராமஜெயம், துணைமேயர் அன்பழகன் ஆகியோர் மீது
கூறப்பட்டுள்ள ஹோட்டல் அபகரிப்பு புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர போலீசார் ரகசிய விசாரணையை தொடங்கினர்.
கடந்த 2007ல் திருச்சி கன்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், டாக்டர் கதிர்வேலுடன் செல் போனில் பேசியது தொடர்பான மூன்று சி.டிக்களை புகார் மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு சிடியில் டாக்டர் கதிர்வேலுக்கு சொந்தமான ஹோட்டலை முன்னாள் அமைச்சர் நேருவும் அவரது தம்பி ராமஜெயமும் வாங்க விரும்புவதாகவும் எனவே, அவர்கள் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு ஹோட்டலை விட்டு விடவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் பேசியுள்ளதாக அந்த சிடியில் பதிவானதாக கூறப்படுகிறுது. அந்த சிடியை ஆய்வு செய்த திருச்சி மாநகர போலீசார் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனின் குரல் தானா என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒரு போலீசாரை தயார் செய்து இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனிடம் செல் போனில் பேச வைத்து அந்த பேச்சை வேறு ஒரு சிடியில் பதிவு செய்தனர். பின்னர் இரண்டு சிடிக்களையும் ஒப்பிட்டு பார்த்த் போலீசார் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் குரல்தான் அது என்பதை உறுதி செய்து கொண்டனர். தற்போது இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சென்னை வீராபுரத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.
டி.எஸ்.பி சுவாமிநாதனை திருச்சி போலீசார் திருச்சி வரவழைத்து அவரிடம் போலீஸ் கமிஷனர் மாசாணமுத்து, துணை போலீஸ் கமிஷனர் ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணையில் சிடி தொடர்பாகவும், ஹோட்டல் அபகரிப்பு விவகாரம் தொடர்பகாவும் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் விசாரணை சூடு பிடித்துள்ளது. எந்த நேரத்திலும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, துணைமேயர் அன்பழகன் ஆகியோரை திருச்சி மாநகர போலீசார் கைது செய்யக்கூடும் என்று போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.மேலும், ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது. ஹோட்டல் அபகரிப்பு தொடர்பாக மூன்று பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, வழக்கு பதிவு செய்யப்பட்டதை ரகசியமாக வைத்துக்கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 weeks ago |
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம்
25 Apr 2025புதுடெல்லி, காஷ்மீர் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் மீது போரா? - திருமாவளவன் கருத்து
25 Apr 2025திருச்சி : பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும்.
-
ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
25 Apr 2025கோவை : கோவயைில் உள்ள ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பயங்கரவாதத்துக்கு துணை போனதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்
25 Apr 2025புதுடெல்லி : இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்த தவறுகளை பாகிஸ்தான் செய்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜ
-
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் தமிழகம் முழுவதும் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் : 9,000 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Apr 2025சென்னை : ஜூன் மாதம் முதல் நான்காம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகைக்கு விடுபட்டவர்களுக்கான பணிகள் தொடங்கும்.
-
தீர்க்கத்துடன் செயல்படுகிறார்: கவர்னருக்கு துணை ஜனாதிபதி பாராட்டு
25 Apr 2025ஊட்டி : கவர்னர்ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.
-
ஊட்டியில் கவர்னர் கூட்டிய மாநாடு: மாநில பல்கலை. துணை வேந்தர்கள் புறக்கணிப்பு
25 Apr 2025ஊட்டி, ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நேற்று காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இதில் பெரும்பாலான அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
-
அடுத்த தொடரில் காணாமலும் போகலாம்: சூர்யவன்ஷி குறித்து சேவாக்
25 Apr 2025புதுடெல்லி : சூர்யவன்ஷியை அடுத்த ஐ.பி.எல் தொடரில் பார்க்க முடியாமலும் போகலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி துணைவேந்தர்கள் மாநாடு: தமிழ்நாடு கவர்னர் குற்றச்சாட்டு
25 Apr 2025ஊட்டி, மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக போலீஸார் மிரட்டியதால் தான் ஊட்டியில் நடந்துவரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவ
-
தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சிகள்: தமிழக அரசு அறிவிப்பு
25 Apr 2025சென்னை, கல்லூரிகளில் 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சிகள் ரூ.3 கோடி செலவில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியது இந்தியா
25 Apr 2025டெல்லி : சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியது.
-
20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம்: யூடியூப் தகவல்
25 Apr 2025வாஷிங்டன் : 20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
-
நெல்லை இருட்டுக்கடைக்கு உரிமை கோரும் நயன் சிங்..!
25 Apr 2025நெல்லை : உயிலின் அடிப்படையில் இருட்டுக்கடை தனக்கு சொந்தம் என உரிமை கோருவதாக நயன் சிங் தெரிவித்துள்ளார்.;
-
வருகிற மே 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா: அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
25 Apr 2025சென்னை, தமிழக உயர்கல்வித் துறை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வருகிற மே 3 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அமைச்சர் கோவி.
-
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 50 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு
25 Apr 2025டெல்அவீவ் : காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி தேர்வு
25 Apr 2025காஞ்சி : காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
நிதானத்தை கடைப்பிடியுங்கள்: இந்தியா, பாகிஸ்தான் அரசுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள்
25 Apr 2025ஸ்டீபன் டுஜாரிக், இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டுவீசி அழிப்பு
25 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 2 லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் குண்டுவீசி அழித்தனர்.
-
என் நேர்மை கேள்விக்குள்ளாவது வருத்தம் அளிக்கிறது: நீரஜ் சோப்ரா
25 Apr 2025புதுடெல்லி : எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது என்று நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
-
போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி
25 Apr 2025வாடிகன் சிட்டி : புனித பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
பாக். வான் வெளியை பயன்படுத்த தடை: இந்திய விமான கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு
25 Apr 2025புதுடில்லி, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டண உயர்வும், நேரமும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
-
சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடியில் தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு
25 Apr 2025சென்னை, சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடியில் தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.
-
திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க சதி..? - போலீசார் தீவிர விசாரணை
25 Apr 2025திருவள்ளூர் : திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரயிலை கவிழ்க்க சதியா?
-
அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை: அமைச்சர் பாராட்டு
25 Apr 2025சென்னை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
எல்லையில் போர்ப் பதற்றம்..? ஸ்ரீநகரில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர முக்கிய ஆலோசனை
25 Apr 2025ஸ்ரீநகர், இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.