முகப்பு

இன்றைய ராசிபலன்

daily horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2019
மேஷம்
aries-mesham
குடும்பத்தில் உணர்ச்சி வசப்படக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகலாம். அஜீரணக் கோளாறு ஏற்படலாம். வழக்குகளில் வெற்றி கேள்விக் குறியாகும்.
ரிஷபம்
taurus-rishibum
எதிர்கால பயன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஏ.சி. போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி மூலமாக நன்மைகள் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
தாராளமான பணவரவு மனத் திருப்தி அளிக்கும். புதிய தொழில், வியாபார முயற்சிகள் வெற்றி அடையும். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும். பெயரும், புகழும் உண்டாகும்.
கன்னி
virgo-kanni
மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்பட்டு, மனைவியின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும். பணவரவு உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மகரம்
capricorn-magaram
செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபச் காரியச் செலவுகள் அதிகரிக்கும். பிரிந்தவர் கூடி பேரின்பம் காண்பர். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்றாக இருக்கும்.
கடகம்
cancer-kadagam
உங்கள் திறமையான செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாததால் மனதில் வருத்தம் எழும். எதிலும் வெற்றி பெற மிகுந்த பிராயாசைப்பட நேரும். பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.
சிம்மம்
leo-simmam
தொழில் போட்டி காரணமாக மந்த நிலை உருவாகி வருமானம் குறையும். உடல் நிலையில் அக்கறை தேவை. தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தால் சிக்கல்களில் இருந்து மீளலாம்.
துலாம்
libra-thulam
கூட்டாளிகளிடையே தொழில்ரீதியான மனக்கசப்புகள் ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலங்கள் தாமதப்படும். குடும்பத்தாரிடையே வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
மீனம்
pisces-meenam
இறை அருள் பெற இனிய புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். புத்திர பாக்கியம் ஏற்படலாம். தொழிலில் புதிய நல்ல திருப்பங்கள் ஏற்பட்டு நிகர இலாபம் அதிகரிக்கும்.
தனுசு
sagittarius-thanusu
தேவையற்ற சாமன்களை வாங்குவதால் பெண்களால் பண விரயமாகும். இன்றைய பணிகள்யாவும் களைப்பைத் தருவனவாக இருக்கும். சேமிப்பு எண்ணங்களை வேறு நாளுக்கு ஒத்திப் போடுவது நல்லது.
விருச்சிகம்
scorpio-viruchagam
இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு, இன்று பேச்சே மூலதனமாகும். அரசால் ஆதாயம் உண்டு. பதவி உயர்வு, பணவரவு உண்டு.
கும்பம்
aquarius-kumbam
இனிய சுற்றுப் பயணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள். உங்கள் மனதை இதமாக்கும் சுக நிகழ்ச்சிகளாக அமையும்.பொருளாதார நிலை ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.
நாள்: Tuesday, March 26, 2019
  • திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் கருடவாகனம்.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புன்னை மர வாகனத்தில் கண்ணாடி அலங்காரம்.
  • மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் விடாயாற்று உற்சவம்.
  • நத்தம் மாரியம்மன் பொங்கல் பெருவிழா மாலை பூக்குழி விழா.
  • உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் காலை வெள்ளி பல்லக்கு.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் தீர்த்தவாரி. தங்கமயில் வாகனம்.