முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஜூனோ தெரியாதது

அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் வியாழன் கிரகத்தை ஆராய அனுப்பிய விண்கலம் தான் ஜூனோ. இந்த ஜூலையில் ஏறத்தாழ ஐந்து ஆண்டு பயணத்திற்குப் பிறகு தன் பயண இலக்கை அடைந்திருக்கிறது. ஜூனோ குறித்து சில தகவல்கள், ஆகஸ்ட் 5, 2011 அன்று ஜூனோ விண்ணில் செலுத்தப்பட்டது. அக்டோபர் 9, 2013 புவிவட்டப் பாதையிலிருந்து விலகி பயணிக்கத் தொடங்கியது. வியாழன் கிரகத்தை இது சென்று அடைந்த நாள் ஜூலை 4, 2016. டென்னிஸ் விளையாடும் மைதானம் அளவு பெரிதான விண்கலம்தான் ஜூனோ. யானையின் எடையில் பாதி. அதாவது, 3.6 டன்கள். 9 மீட்டர் நீளம் கொண்ட மூன்று சோலார் பேனல்களைக் கொண்டுள்ளது.

அனைவருக்கும் ஏற்றது

பழங்களில், வாழைப்பழத்தில் மட்டும் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. இதனால் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட வாழைப்பழத்தை சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைத்துக்கொள்ளலாம்.

உலகின் மிகச் சிறிய பாலூட்டி

உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி விலங்கு எது தெரியுமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. bumblebee bat என்று அழைக்கப்படும் சிறிய வவ்வால்கள்தான் அவை. இவற்றின் உடல்களின் மொத்த நீளமே 1.14 முதல் 1.29 அங்குலம் மட்டும்தான்.  அதன் இறக்கைகளின் அகலம் 5.1 முதல் 5.7 அங்குலம் மட்டுமே. இந்த வவ்வால்கள் கின்னஸிலும் இடம் பிடித்துள்ளன. தாய்லாந்திலுள்ள Khwae Noi River நதிக்கரையில் அமைந்துள்ள Kanchanaburi மாகாணத்தில் அமைந்துள்ள குகைகளில் இவ்வகை வவ்வால்கள் வாழ்கின்றன.

நன்றி உணர்வு

பிரேசில் நாட்டை சேர்ந்த பிகுயிரோடோ, செரினோ என்ற குதிரையை வளர்த்து வந்தார். திடீரென விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கின்போது அங்கு வந்த குதிரை செரினோ உரிமையாளர் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கலாம் பெயர்

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் புதிய உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய உயிரினம், பாக்டீரியா வடிவம் போன்றது. இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுபவை. இந்த உயிரினத்துக்கு மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை நாசா விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

மனிதர்களை மிஞ்சும் ரோபோ

ரோபோகள் மருத்துவர்களால் செய்ய முடியாத பல செயல்களை நொடிப் பொழுதில் செய்து முடித்து விடுகிறது. அமெரிக்காவில் உள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்று, 2.5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ரோபோவினை வடிவமைத்துள்ளனர். பொதுவாக மூளை அறுவை சிகிச்சை செய்ய மனிதர்களால் குறைந்தது 2 மணி நேரமாகும். ஆனால் அதே அறுவை சிகிச்சையை வெறும் 2.5 நிமிடத்தில் செய்யக்கூடிய திறன் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரோபோ. மேலும் சி.டி ஸ்கேன் தொழில்நுட்பத்தில் மூளையின் பகுதிகளை பிரித்து அறியக்கூடிய திறனையும் இந்த ரோபோ பெற்றுள்ளது. மூளை அறுவை சிகிச்சையில் மட்டுமல்ல, இடுப்பு தொடர்பான ஆபரேஷன்களிலும் இந்த சாதனம் பயன்படுத்தபடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago