எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Monday, September 15, 2025 to Sunday, September 21, 2025
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி -- இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு, கடின உழைப்பினால், வாழ்க்கையில் முன்னேற்றங்கள் அடைவீர்கள். சிலருக்கு, கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அனைத்து இலக்குகளையும் எளிதில் அடைய உங்கள் தீர்மானங்களை மறுபரிசீலனைக்கு உள்ளாக்குங்கள், முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள், கணக்குகளை சீராக்குங்கள் அப்போதுதான் அதில் வெற்றி அடைய முடியும். தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். சிலருக்கு தொழிலில் முன்னேற்றங்கள் தடைப்படும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் வந்து சேரும்.
பரணி -- இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். அஸ்திவாரம், அல்லது அடிப்படை விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினால், நீங்கள் போட்ட திட்டங்கள் அனைத்தும் குழப்பமோ, சிக்கல்களோ இன்றி கச்சிதமாக முடிவடையும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து கௌரவம் உயரும். புதிய திட்டங்கள் மூலம் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழிலில் முன்னேற்றம் காண முயல்வீர்கள். மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் எதிர்பாராத தனவரவு வர ஏற்றம் காண்பீர்கள். தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். புதிய வீடு, பூமி வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராக ஆவர். பிராயணங்கள் மூலம் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றம் காண முயல்வீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரும்.
ரிஷபம்
மிதுனம்
(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் மனங்கவர்ந்த அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வு கிடைக்கும். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், நீண்ட நாட்களுக்குப் பிறகு, பயிர், மனை இவற்றால் லாபம் ஏற்படும். பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும், தொழிலில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். தந்தை வழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். அரசு அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரச பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் பெற முயற்சிப்பர்.
திருவாதிரை --- இந்த வாரம் தெய்வ சிந்தனைகள் மூலம் மனதில் அமைதி நிலவும். குருவருளும், திருவருளும் பெற்று மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்வில் மலரும்> நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். அறிஞர்களுக்கு, கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். அரசுப் பணியாளர்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்தி, லாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பார்கள். உடன் பிறப்புகளுடன் சுமுகமாக செல்வது நல்லது. இடைவிடாத வேலை பளு காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள் பயணங்களால் துன்பமே ஏற்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு ஏற்படும். குடும்ப உறவுகளின் மூலம் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு மூலம் பணியில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் நெருக்கத்தால் இன்புறுவீர் கள். புதிய நண்பர்களால் பல நன்மைகள் ஏற்படும். மாணவர்களின் கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும்.
கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் இறைவனை நினைத்து இன்னல்களைக் குறைத்துக் கொள்வார்கள். மனதில் அமைதியும் நிலவும். சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். சந்ததி விருத்தி ஏற்படும். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும் அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாமதப்படும். அரசு கூறும் வழிமுறைகளை கையாண்டு, உங்களை, நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள்.
அஸ்தம் – இந்த வாரம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். பெண்களால் லாபம், வீட்டில் தாமதப்பட்ட, சுப நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும். அதன் மூலம் வரும் இன்பம் நிலைத்திருக்கும். இசை ஆர்வத்தால் வலைத்தளங்களில் இசையினை கேட்டு மகிழ்வார்கள். கண்களுக்கும் சிறிது ஓய்வு கொடுங்கள். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பெரியவர்கள் அல்லது அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை பொன் போன்றது. இன்று புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உயர் திட்டங்கள் நல்ல பலன்களைத் தரும். ஒத்துபோதல் மற்றும் அனுசரித்துப் போதல் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியில் இருக்கும் வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் புதிய வீடு மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெரும். அதற்கான வங்கி கடன் உதவிகள் சுலபமாக கிடைக்கும். வீட்டில் திருமணம் சம்பந்தமான பேச்சுக்கள் எழும். உங்கள் உடலில் சுறுசுறுப்பு குறைந்து, சோம்பல் அதிகரிக்கும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஏமாற்றத்தை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம். கவனம் தேவை. நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் வீட்டில் தாமதமான, சுபமங்கள காரியங்கள் நடக்கும். அதன் காரணமாக செலவுகள் ஏற்படும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புகள், லாட்டரி யோகங்கள், ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். பயமும், தடைகளும் உங்கள் பெரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஆவதை அனுமதிக்காதீர்கள். தட்டுங்கள் திறக்கப்படும். அர்த்தமற்ற பலப் பரிட்சை களிலும், தலைக்கனம், கர்வம் மிக்க செயல்பாடுகளிலும் ஈடுபடாது அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் பழைய அனுபவங்களின் தாக்கம் புதிய செயல்பாடு எனும் கிரீடத்தில் வைரமாக மின்னும்.
திருவோணம் - இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள். உறவுகளுடன் சமூக இடைவெளிவிட்டு, உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சிலருக்கு வீண் பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும்.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம், சுற்றமும், நட்பும் சூழ, தடைப்பட்டிருந்த, சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். வியாபாரத்தில் புதிய விரிவாக்கத் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். நல்லோர் சேர்க்கையால் மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. அரசுப் பணியாளர்கள் தங்கள் தளராத சேவைகளுக்காக பாராட்டைப் பெறுவார்கள்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் சிலருக்கு, கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கை மூலம் செலவுகள் கூடும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் கூடும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால், பதவி உயர்வுகள் தேடி வரும். சிலருக்குப் பணியில் இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம், கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை, ஆகியவை ஏற்படும். எனவே துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள். சிலருக்கு, குறுகிய தூரப் பயணங்கள் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும்.
பூசம் -- இந்த வாரம் வாழ்க்கையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு, முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். சிலருக்குப் பயணங்களால் தொல்லை உண்டாகும்.. தாய்வழி உறவுகள் உதவி செய்வார்கள். உடன்பிறப்புக்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு அருந்த முடியாத நிலை ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய வரி பாக்கிகள் செலுத்துவதற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் – இந்த வாரம் வீட்டில், தடைப்பட்ட, தாமதமான, சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். நல்ல பல கருத்துக்களை கேட்பதின் மூலம் உங்களுக்கு ஞான தன்மை அதிகரிக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை ஆகியவை ஏற்படும். கற்பனை வளம் பெருகும். நிகழ்வின் அடிப்படை நிலைமைகளைப் புரிந்து கொண்டு முக்கிய காரியங்களில் ஈடுபட்டால் பிறரிடம் தலைகுனியும் நிலையைத் தவிர்க்கலாம். இன்றைய பணிகளில் முழு மூச்சுடன் இறங்கி செயல்பட்டால் அந்த செயற்பாட்டின் வெற்றிக்கு வானமே எல்லை யாக அமையும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரம் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் மூலம் வீடே விழாக்கோலம் காணும். திடீரென ஏற்படும் இனிய பயணங்களால் ஆதாயம் மற்றும், மகிழ்ச்சியும் ஏற்படும். பண வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். சுபகாரிய செலவுகள் ஏற்படும். அழகிய ஆடை ஆபரணங்கள் கிடைக்கும். தாய் மூலம் நன்மைகள் ஏற்படும். நீங்கள் எப்போதும் பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடன் இருப்பீர்கள். சிலருக்குப் பயணங்களில் எதிர்பாராத சில பிரச்சனைகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடைகள், தாமதங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப்பயன்களை அடைவீர்கள்.
பூரம் – இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டில் பூஜைகள் செய்வார்கள். . .மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர். வாக்குவாதத்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத் தானதர்மங்கள் செய்வார்கள். அரசாங்கத்தால் அனுகூல பலன்கள் உண்டு. உறவு மற்றும் நண்பர்கள் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமான ஆதாயம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரிய செய்திகள் வரும். செலவுகளும் அதிகரிக்கும். அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு, பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். பெண்களின் அறிவுத் திறன் கூடும். உங்கள் தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பழைய கடன்கள் சுலபமாக வசூலாகும்.
துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். சுறுசுறுப்பாக பணிகளை ஆற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். புனித யாத்திரைகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது புது முயற்சியில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். புதிய செய்திகள் வர இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதற்கு முன் நன்கு படித்த பின் கையொப்பம் இடவும். பண விஷயத்தில் ஏமாற்றத்தை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வியாபார விருத்தி ஏற்படும். அரசுப் பணிபுரிபவர்களுக்கு விருப்பப்படி புதிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.
சுவாதி – இந்த வாரம் பெண்களால் லாபம், வீட்டில் தடைப்பட்ட, சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. இளைஞர்கள் வேலைக்காகப் பல இடங்களுக்கு அலைந்து திரிய நேரிடும். போக்குவரத்து தடங்கல்கள் காரணமாக தாமதங்களும் ஏற்படலாம். அசைவ விரும்பிகளுக்கு அஜீரண தொல்லைகள் எழலாம். வியாபாரப் பயணங்கள் மூலம் வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவார்கள்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். திடீர்ப் பயணங்கள் மூலம் தடைகளுக்குப் பிறகு, ஆதாயங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும் இன்று எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் மனதில் உறவுகளை அனுசரித்து சென்றால் வெற்றி உங்களுக்கே. சிலருக்குப் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலமாக இருக்கும். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்து விடுவார்கள்.
மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி தடை, தாமதங்களுக்குப் பிறகு, முன்னேற முயல்வீர்கள். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலம் பண வருவாய் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி- இந்த வாரம் அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், தாமதமாகிக் கொண்டிருந்த, பூமி, வீடு மூலம் லாபம், இப்போது ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். கலை மற்றும் ஆக்க பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் புதிய அலைகள் வீசும். சிலருக்கு காதல் வானில் மந்திர மயக்கங்கள் ஏற்படும். பொருளாதார விவகாரங்களில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கொண்டு கண்காணிக்க வேண்டிய காலமாகும்.
ரேவதி- இந்த வாரம் எதிர்பாராத தனவரவு மூலம் ஏற்றம் காண்பீர்க ள்இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். தைரியமும், தன்னம்பிக்கையும் உங்கள் வெற்றிகளுக்கு வரவேற்பு அளிக்கும் போது தான் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் நிகழும். முக்கிய நிகழ்வுகளில் பொறுமையும், திட்டமிட்ட செயல்பாடுகளும் ஏற்றம் தரும். உங்கள் பணி இடத்தில் பணிகள் விருப்பமுடன் செய்யப்படுமானால் உற்பத்தியும் பெருகும் என்பதை உணருங்கள். உங்கள் அன்புக்கு பாத்திரமானவர் களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுத்து உறவினை பலப் படுத்துங்கள்.
தனுசு
மூலம் -1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு, எதிர்பாராத தனவரவு உண்டு. சிலருக்கு, சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவி கள் கிடைக்கும். வியாபார நிமித்தமாக செல்லும் பயணங்களால் சிறு, நன்மை ஏற்பட்டு, ஓரளவு, வெற்றிகரமான முன்னேற்றங்கள் ஏற்படும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு உழைத்தால்தான் அதற்கேற்ப இலாபமோ, பலனோ கிடைக்கும். வேலையில் சிரத்தையும், கடின உழைப்பு தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள் பணப் பெட்டியில் பணம் சேரும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர்.
பூராடம் – இந்த வாரம் உங்களுக்கு மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம், எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். உறவுகளை அனுசரித்து சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைக்க பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும்.
உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் பல நாட்களுக்குப் பிறகு, தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகள் வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். இதுநாள் வரை தடைப்பட்டிருந்த, புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் முக்கிய குறிக்கோள்களை அடைய மன தைரியமும், உடல் பலமும் முக்கியமானதாகும். புத்துணர்ச்சியுடனும், புதிய கோணத்திலும் திட்டமிடல் சிறப்பு. பணியாளர்களுக்கு ஊக்கம் அளிப்பது, உற்பத்தியையும் பெருக்கும் என்பதில் ஐயமில்லை. அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும்.
விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள்)
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகள் மூலம் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். தடைப்பட்ட புத்திர பாக்கியம் ஏற்பட வாய்ப்புண்டு. தாமதப்பட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் நடந்து, இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். புதிய விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவால் ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.
அனுஷம் – இந்த வாரம் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். உங்கள் பொருளாதார நிலை திருப்திகரமாக தாக இருக்கும். விருந்துகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதை கழிப்பீர்கள். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு, முன்னேற்றமான காலம் இது. திட்ட அறிக்கைகள் தயாரிப்பதற்கு, பொருட்களை விளம்பரப் படுத்துவதற்கும் சாதகமான வாரம் இது. நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள்.
கேட்டை – இந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றஞ்சாட்டப்பட்டு அவதிப்பட நேரும். சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர தாமதமாகும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். அரசியல்வாதிகளிடம் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும்.
கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு, பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை வாங்கும் எண்ணம் உருவாகும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். ஆனால், அவற்றில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லுங்கள். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு, நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். சிலருக்கு எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சதயம்- இந்த வாரம் பல வகையான உயர்ந்த வாகன வசதிகள் அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். நல் ஆரோக்கியம் ஏற்படும். சிலருக்கு,, அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். அரசு பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். மாணவர்கள் கல்வியில் முன்னேற மிகுந்த அக்கறையுடன் படித்தல் அவசியம்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் பல வழிகளிலும் பணவரவு கூடுதலாக இருக்கும். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். வியாபார சம்பந்தமான பயணங்கள் லாபம் தரும். பணிபுரியும் பெண்களுக்குத் தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
ராஜஸ்தான்: காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற கொடூர தாய்..!
18 Sep 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை தாய் ஒருவர் ஏரியில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியு
-
தமிழகம் முழுவதும் தீர்மான கூட்டங்கள் நடத்த உத்தரவு: தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியீடு
18 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப்.
-
நேபாளத்தில் அமைதி திரும்ப இந்தியா முழுஆதரவு அளிக்கும்: சுசீலா கார்கிடம் பிரதமர் மோடி உறுதி
18 Sep 2025புதுடெல்லி, நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பேசிய பிரதமர் மோடி, நேபாளத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று
-
தலைவர்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்: த.வெ.க.வுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
18 Sep 2025சென்னை, த.வெ.க. பரப்புரைக்கு அனுமதி வழங்கக்கோரி வழக்கில் தலைவராக இருப்பவர்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
அறுவை சிகிச்சை அறைக்குள் புகுந்த பாம்பு: டாக்டர்கள் அலறி அடித்து ஓட்டம்
18 Sep 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் அறுவை சிகிச்சை அறைக்குள் பாம்பு புகுந்ததால் டாக்டர்கள் ஓட்டம் பிடித்தனர்.
-
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல்: 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மச்சாவு..!
18 Sep 2025பிரேசிலியா: அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமாக இறந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.