முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசுடன் கூட்டணி- உள்ளாட்சித் தேர்தலில்இல்லை கருணாநிதி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.- 16 - பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மட்டும்தான் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி சேரும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக  அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடுவது ஏன்? என்பதற்கு கட்சித் தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி: அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு என்ன கூறுகிறீர்கள்?  பதில்: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்பதிலும், ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதிலும் அண்ணா அக்கறை காட்டினார். சர்வாதிகாரம் தலை தூக்கக் கூடாது என்று விரும்பியவர் அவர். அந்த உணர்வுகளை தி.மு.க.வினர் பிரதிபலிப்பர்.  கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடுவதற்கான காரணம் என்ன? 

பதில்: காரணத்தை என் அறிக்கையில் குறிப்பிடுகிறேன். கேள்வி:  இது தாமதமான முடிவா? 

பதில்: சட்டசபை தேர்தல் முடிந்ததும் எடுத்த முடிவுதான். தாமதமான முடிவு அல்ல. 

கேள்வி: காங்கிரசுடன் கூட்டணி நீடிக்குமா? 

பதில்:  காங்கிரசுடன் உறவு நீடிக்கிறது.எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் கூட்டணி நீடிக்கும் என்று கூறியிருக்கிறேன். இது உள்ளாட்சி தேர்தல். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து நடக்கும் தேர்தல். எனவே, இதில் தனியாக  போட்டியிட  முடிவு எடுத்துள்ளோம். அதற்கான தைரியம் இருக்கும் காரணத்தாலும்  தனித்து போட்டியிடுகிறோம். 

கேள்வி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விழாவை கலெக்டர் புறக்கணித்து உள்ளாரே? 

பதில்: மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளுக்கான கூட்டம் அது. மேலிடம் சொல்லித்தான் அவர் புறக்கணித்து இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. 

கேள்வி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒவ்வொரு அமைப்பும்  ஒரு காரணத்தை கூறுகிறதே? முதலில் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் என்று ஒரு அமைப்பு கூறியது. இப்போது சைபர் இழப்பு என்று ஒரு அமைப்பு கூறி இருக்கிறதே? 

பதில்: அதைத்தான்  நாங்களும் கூறுகிறோம். ஒவ்வொரு அமைப்பும் ஒரு கருத்தை கூறுகிறது. இது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. 

கேள்வி: கனிமொழியால் நஷ்டம் இல்லை, லாபம்தான் என்று கூறப்பட்டுள்ளதே? 

பதில்: 2 ஜி வழக்குக்கும் கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை. அவர் கலைஞர் டி.வி. பங்குதாரர். இதுவரை பங்குதாரரை ஊழல் வழக்கில் சேர்த்தது இல்லை. 

கேள்வி: தி.மு.க.வினர் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்களே? 

பதில்: அடக்குமுறை, அவதூறு செய்திகள் மூலம் சர்வாதிகாரத்தை நிலை நாட்டலாம்  என்று ஜெயலலிதா கருதுகிறார். எந்த சர்வாதிகார  ஆட்சியும் நீடித்ததாக வரலாறு இல்லை. 

இவ்வாறு கருணாநிதி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago