முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்வீடன் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

ஸ்டாக்ஹோம், அக்.8 - ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கவிஞர் டோமாஸ் டிரான்ஸ்ட்ரோமருக்கு இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் ஆழ்மனதில் உள்ள ரகசியங்களை யதார்த்தமாக வெளிப்படுத்தும் இவரது படைப்புகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 80 வயதாகும் கவிஞர் டோமோஸூக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடலின் இடது பகுதி முற்றிலுமாக செயலிழந்தது. அவரால் பேச முடியாமலும் போனது. எனினும் தனது இலக்கியப் பணியையும், மன உறுதியையும் அவர் கைவிடவில்லை. 

டோமோஸின் படைப்புகள் 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் புகழ் பெற்ற பிற மொழி கவிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெறும் 8 வது ஐரோப்பியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. டோமாவின் ஸ்வீடன் பதிப்பு கமான் போனியர்ஸ் 1954 முதல் 2004 ம் ஆண்டு வரையிலான அவரது படைப்புகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அவரது 80 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த தொகுப்பு வெளியிடப்பட்டது. 

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பிறந்த டோமாஸின் தந்தை ஒரு பத்திரிக்கையாளர் என்பதும், தாய் ஆசிரியை என்பதும், பள்ளியில் படிக்கும் போது கவிதைகளை எழுத் தொடங்கியவர் டோமாஸ் என்பதும் தனது 23 வயதில் தனது முதல் கவிதை தொகுப்பை வெளியிட்டதும், உளவியலாளராக பணியாற்றிக் கொண்டே தனது இலக்கிய பணியை தொடர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago