முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானிடம் நம்பிக்கை சற்று வளர்ந்து வருகிறது - கிருஷ்ணா

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

மாலே, நவ.- 10 - பாகிஸ்தானிடம் ஏற்கனவே இருந்த நம்பிக்கையின்மை சற்று குறைந்துள்ளது. அதனால் அந்நாடு இப்போது சற்று நம்பிக்கைக்குரிய வகையில் தோன்றுகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். மாலத்தீவில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று விமானத்தில்  புறப்பட்டுச் சென்றார். விமானத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மாலத்தீவில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டின்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான்  பிரதமர்  யூசப் ரஜா கிலானியும்  சந்தித்து பேச இருக்கிறார்கள். இந்த சந்திப்பு குறித்து கிருஷ்ணாவிடம் கேட்டதற்கு  இரு நாடுகளுக்கும் இடையே  தற்போது நம்பிக்கை  சற்று வளர்ந்து இருக்கிறது. எனவே இரு பிரதமர்களின் சந்திப்பு  நல்லெண்ணம் மிக்கதாக இருக்கும் என்று அவர் கூறினார். இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு பேச்சில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்தார். மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற  அந்தஸ்தை இந்தியாவுக்கு பாகிஸ்தான் கொடுத்துள்ளது. எனவே இந்த இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இந்த அம்சம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் இந்தியாவுடன் சேர்ந்து  கூட்டறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது என்றும்  பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி முகாம்களை ஒழிக்க  அந்நாடு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago