முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டியில் தெ.ஆ. வீரர் பெளச்சர் 500 கேட்சுகள் பிடித்து புதிய உலக சாதனை படைத்தார்

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன், நவ. - 12 - சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீக்கெட் கீப்பரான மார்க் பெளச்சர் 500 கேட்சுகள் பிடித்து புதிய உலக சாதனை படைத்து இருக்கிறார். இது  பற்றிய விபரம் வருமாறு -  மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பி ரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் கிரீம் ஸ்மித் தலை மையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.  தென் ஆப்பிரிக்கா மற்ஹும் ஆஸ்திரேலிய ?அணிகலுக்கு இடையே 2 போட்டிகல் கொண் ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது.   இதன் முதல் போட்டி கேப்டவுனில் நடந்து  வருகிறது.  இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 284 ரன்னும், தென்  ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில், 96 ரன்னும் எடுத்து இருந்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணி 2 -வது இன்னிங்சில் மிக  மோசமாக விளையாடியது.  இந்த இன்னிங்சில் ஆஸி. அணி அநைத்து வக்கெட்டையும் இழந்து 47 ரன்னில் சுருண்டது. அன்த அணி இவ்வளரு குறைந்த ஸ்கோரில் ஆட்டம் இழப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் போட்டிஇயன் போது தென் ஆப்பிரிக்கா ரிக்கெட் கீப்பர் மார்க் பெளச்சர் 500 - வதுகேட்சு பிடித்து புதிய சாதனை படைத்தார். அவர் தனது 500 - வது கேட்டசாக ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் பிலிப் ஹக்கீஸ் அடித்த பந்தை பிடித்தார். இந்த பந்தை வெர்னான் பிலான் வீசினார்.  தென் ஆப்பிரிககா அணியின் மூத்த வீரரான பெளச்சர் கடந்த 1997 -ம் ஆண்டு முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இது வரை அவர் மொத்தம் 140 டெஸ்டுகளில் விளையாடி இந்த சாதனையை படைத்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago