முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா டெஸ்ட்: மே.இ. தீவு அணி பாலோ ஆன் ஆனது

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா, நவ.17 - இந்திய அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், மே.இ.தீவு அணி முதல் இன்னிங்சில் 153 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் பாலோ ஆன் ஆனது. அந்த அணி தற்போது 283 ரன் பின்தங்கி உள்ளது. இந்திய அணி தரப்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஓஜா மற்றும் வேகப் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இருவரும் வெகு நேர்த்தியாக பந்து வீசி மே.இ.தீவு அணியில் சரிவை உண்டாக்கினர். அஸ்வின் அவர்களுக்கு பக்கபலமாக பந்து  வீசினார்.
மே.இ.தீவு அணியின் முதல் இன்னிங்சில் ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. டிவைன் பிராவோ அதிகபட்சமாக 30 ரன்னையும், சாமுவேல்ஸ் 25 ரன்னையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 2 -வது கிரிக் கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது. இந்திய அணி இறுதியில் 151.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 631 ரன்னைக் குவித்து ஆட்டத்தை டெக்ளேர் செய்தது.
இந்திய அணி தரப்பில், 3 வீரர்கள் சதம் அடித்தனர். டிராவிட் 207 பந்தில் 119 ரன்னையும், வி.வி.எஸ். லக்ஷ்மண் 280 பந்தில் 176 ரன்னையும், கேப்டன் தோனி 175 பந்தில் 144 ரன்னையும், துவக்க வீரர் காம்பீர் 65 ரன்னையும் எடுத்தனர்.
பின்பு முதல் இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 153 ரன்னில் சுருண்டது.
மே.இ.தீவு அணி சார்பில் டிவைன் பிராவோ அதிகபட்சமாக 30 ரன் னையும், சாமுவேல்ஸ் 25 ரன்னையும், கேப்டன் சம்மி 18 ரன்னையும் எடுத்தனர். தவிர, பிராத் வெயிட் 17 ரன்னையும், கே. எட்வர்ட்ஸ் 16 ரன்னையும், எப். எட்வர்ட்ஸ் 16 ரன்னையும் எடுத்தனர்.
முன்னதாக மே.இ.தீவு அணியின் ஸ்கோர் 3 ரன்னில் துவக்க வீரர் பரத் ஆட்டம் இழந்தார். பின்பு 30 ரன்னில் பிராத்வெயிட் அவுட்டானார். 42 ரன்னில் கே. எட்வர்ட்ஸ் வெளியேறினார். அதன் பின்பு சிறிது இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இந்திய அணி தரப்பில் முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஓஜா சிறப்
பாக பந்து வீசினார். அவர் 64 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 23 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். தவிர, அஸ்வின் 49 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். மே.இ.தீவு அணி முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டதால் பாலோஆன் ஆனது. இதனால் அந்த அணி தொடர்ந்து 2 -வது இன்னிங்சை ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் மே.இ.தீவு அணி 2 -வது இன்னிங்சி
ல் 62 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது டிவைன் பிராவோ 38 ரன்னுடனும், சந்தர்பால் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
முன்னதாக துவக்க வீரர் பரத் 105 பந்தில் 62 ரன்னை எடுத்து ஆட்டம் இழந்தார். கே. எட்வர்ட்ஸ் 128 பந்தில் 60 ரன்னை எடுத்தார். பிராத் வெயிட் 9 ரன்னில் வெளியேறினார். இந்திய அணி சார்பில், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டையும், யாதவ் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago