முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் அறிவிப்பால் கூடங்குளத்தில் பதட்டம் போலீஸ் குவிப்பு - நிலவுகிறது

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை-டிச -- 19 - கூடங்குளம் அணுஉலை இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் தோடங்கப்படும் என பிரதமர் அறிவிப்பை தொடர்ந்து கண்டனம் தெரிவித்து அணுஉலை எதிர்ப்பு போராட்டகாரர்கள் நடத்தும் நடைபயணத்திற்க்கு போலிசார் தடை விதித்து உள்ளனர். இதனால் கூடங்குளத்தில் பதட்டம் நிலவுவதால் போலிஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்ட முதல் அணு உலை பணிகள் 99.2 சதவிதம் முடிந்துவிட்டது. இது போல மற்றொரு யூனிட் பணிகளும் பெருமளவு முடிந்துவிட்டன. இதுவும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்டது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின்  நிலையத்தை மூட வலியுறுத்தி அணுஉலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரை கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக தொடர் போராட்டத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர் போராட்ட குழுவினருடன் 3 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யா நாட்டிற்கு சுற்று பயணம் சென்றார்.  அங்கு வைத்து பிரதமர் மந்மோகன்சிங் கூடங்குளம் அணுமின் நிலையம் ஓரிரு வாரங்களில் செயல்படும் என்று அறிவித்தார். இது அணுஉலை எதிர்ப்பு போராட்டகாரர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது. பிரதமரின் ரஷ்ய பயணத்தை கண்டித்து இடிந்தகரை கிராமத்தில் 3 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் கடையடைப்பு, மீனவர்கள் வேலை நிறுத்தும் நடத்தப்படும் என்று  போராட்ட குழுவினர் அறிவித்தனர். அதன்படி அவர்கள் போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. போராட்டத்தின் 2-ம் நாளான நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கினைப்பாளர் உதயகுமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பிரதமரின் அறிவிப்புக்கு பின் பணிகள் நடந்தால் அணுமின் நிலையத்தை குடும்பத்துடன் முற்றுகையிடும் போராட்டம் ஈடுபடுவது. பிரதமரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து நேற்று மதியம் கூடங்குளம் பத்திரகாளி அம்மன் கோவில் முன்பாக அனைத்து கிராம மக்களும் ஒன்று கூடி, அங்கிருந்து 10 கி.மீ தூரம் நடை பயணமாக சென்று ராதாபுரம் பஸ் நிலையத்தின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபடுவது. அணுமின் நிலையத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள யுரேனியம் எரிபொருளை வருகிற 31 ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். அப்படி அகற்றாத பட்சத்தில் அதை கண்டித்து ஜனவரி 1-ம் தேதி அதிதீவிரமான போராட்டத்தில் ஈடுபடுவது ஆகிய 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போராட்டக் குழுவினர் எடுத்துள்ள முடிவின் படி  கூடங்குளத்தில் இருந்து  நடைபயணம் போராட்டம்  நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆகவே கூடங்குளம், இடிந்ததகரை, ராதாபுரம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களின் நடைபயணம் தொடங்கும் கூடங்குளம் வைராவிகிணறு பகுதியில் தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் வருண் வாகனம், கண்ணீர் புகை குண்டுகள் வீசும் வஜ்ரா வாகனம் உள்ளிட்ட
கலவர தடுப்பு வாகனங்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போலீசாரின் தடையை மீறி நடைபயணம் போராட்டம் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் தொடங்கியது. இதில் செட்டிகுளம், கூட்டப்புளி, பெருமணல், எஸ்.எஸ்.புரம், இடிந்தகரை, விஜயாபதி, தோமையார்புரம், கூத்தங்குளி, உவரி, கூடுதாழை, பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தா, அமலிநகர், வீரபாண்டியன்பட்டனம், திட்டங்குளம், காமனேரி, தாமஸ்மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டகாரர்களின் இந்த ஊர்வலம் ராதாபுரம் பஸ் நிலையம் வரை நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago