முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவ குழு 3 நாள் பயணமாக நாளை சீனா செல்கிறது

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. - 9 - ஏற்கனவே திட்டமிட்டபடி இந்திய ராணுவக் குழு 3 நாள் பயணமாக சீனாவுக்கு நாளை 10 ம் தேதி செல்லவுள்ளது.  பாதுகாப்பு துறை பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் 30 பேர் கொண்ட இந்திய ராணுவக் குழுவினர் சீனா செல்ல இருந்தது. இந்நிலையில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த இந்திய விமானப் படை அதிகாரி பாங்கிங்குக்கு விசா வழங்க சீனா மறுத்து விட்டது. இதையடுத்து இந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு மாறாக திட்டமிட்டபடி இந்திய குழு சீனா செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் முன்னர் அறிவிக்கப்பட்டது போல் அல்லாமல் 30 பேருக்கு பதிலாக முப்படைகளை சேர்ந்த 15 பேர் மட்டுமே சீனா செல்லவுள்ளனர். இந்த குழு சீனாவில் பெய்ஜிங், ஷாங்காய், நான்ஜிங் நகரங்களுக்கு செல்லவுள்ளது. அருணாசல பிரதேசம் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வரும் சீனா அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா அளிப்பதில்லை. இதற்கு இந்தியா அவ்வப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதே போன்று 2010 ல் ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்த வடக்கு மண்டல கமாண்டர் ஜஸ்வாலுக்கு விசா அளிக்க சீனா மறுத்தது. அப்போது இரு தரப்பு உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய தரப்பில் பல்வேறு முயற்சிகளுக்கு பின் கடந்த ஆண்டு ஜூனில் இந்திய ராணுவ குழு சீனா சென்றது. கடந்த மாதம் சீன ராணுவ குழு இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago