முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் ஒபாமாவுடன் சவூதி அமைச்சர் முக்கிய சந்திப்பு

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஜன.12 - பாரசீக வளைகுடா பகுதியில் மீண்டும் பதட்டம் உருவாகியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் இளவரசருமான சவுத் அல்-பைசல் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு வெள்ளைமாளிகையில் நடைபெற்றது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளதோடு அந்த நாடு மீது பல்வேறு வழிகளில் பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தி வருகிறது. ஈரானில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆயில் ஏற்றுமதி செய்வதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது. அப்படி நடவடிக்கை எடுத்தால் ஹர்மூஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்க கப்பல்கள் மற்றும் இதர நாடுகளின் கப்பல்களை விடமாட்டோம் என்று ஈரான் மிரட்டுகிறது. கப்பல்களை தடுத்து நிறுத்தினால் ஈரான் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவும் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்தநிலையில் ஈரான் மீது தாக்குதல் நடக்கும் சமயத்தில் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று இதர அரபு நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் அதிபர் ஒபாமாவை சவூதி நாட்டு இளவரசர் சவுத் அல்-பைசல் சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்காவுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்போம் என்றும் பைசல் உறுதி அளித்திருப்பதாகவும் தெரிகிறது. சவூதி அரேபியாவுக்கு எதிராக ஈராக் இருந்தது. ஈராக்கை அமெரிக்கா ஒடுக்கிவிட்டது. அடுத்து ஈரானை ஒடுக்கிவிட்டால் சவூதி பகுதியில் சவூதி அரேபியாவின் செல்வாக்கு அதிகரிக்கும். அதேசமயத்தில் அரபு நாடுகளில் அமெரிக்கா வைத்ததுதான் சட்டமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் பைசல் சந்தித்து பேசினார். எகிப்து, பஹ்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் ஜனநாயகம் மலர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago