முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

சனிக்கிழமை, 14 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

அகர்தலா, ஜன. 14 - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை திரிபுரா மத்திய பல்கலைக் கழகம் வழங்கியது.  அமைதி மற்றும் பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயகத்துக்கு பாடுபட்டு வரும் அவரை கவுரவிக்கும் வகையில் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி தலைமை வகித்தார். ஹசீனாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பேசிய அவர், சமூகத்தை பாதிக்கும் பயங்கரவாதம், தீவிரவாதத்தை எதிர்த்து போராடி வரும் அவரது தைரியத்தை பாராட்டுகிறேன். மிதவாதம், சகிப்பு தன்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை வங்கதேசத்தில் சிறப்பாக அமல்படுத்தி வரும் உங்கள் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம் என்றார். மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் மொழி, கலாசார ரீதியாக பொதுவான அம்சங்கள் உள்ளன. ஹசீனா பொறுப்பேற்றதும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் மாநில கவர்னர் பாட்டீல், திரிபுரா மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர் அமியாகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago