முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் இந்தியா - இலங்கை புதிய மீன்பிடி ஒப்பந்தம்

புதன்கிழமை, 18 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

கொழும்பு, ஜன. - 18 - தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே உள்ள பாக். ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதிகளில் மீன் பிடிக்க ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கை சென்றுள்ள நிலையில் இலங்கை வெளியுறவு துறை வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பு, கடல் வளத்தை நீடித்திருக்க செய்வது, கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்ற அம்சங்களை இந்த உடன்பாடு கவனத்தில் கொள்ளும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, சர்வதேச கடல் எல்லையை தாண்டி பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு இருக்கும் பாரம்பரிய உரிமை தொடர்பான கோரிக்கையை கைவிடுவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டிருப்பதாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னா பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு விளக்கமளித்து இலங்கை வெளியுறவு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மீன் பிடித்தல் தொடர்பாக இரு தரப்பு கூட்டு நடவடிக்கை குழுவின் 4 வது கூட்டம் கடந்த 13, 14 ம் தேதிகளில் நடந்தது. அதில் பாரம்பரிய மீன் பிடி உரிமை போன்றவற்றில் இந்தியாவும், இலங்கையும் தத்தமது நிலையை தொடர்ந்து வலியுறுத்தின. அதே நேரத்தில் இரு நாட்டு மீனவர்களும் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலை செய்வதற்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை தங்களது அரசுகள் எடுக்க விரும்புவதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் பாதுகாப்பு, கடல்வளம், கடல் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு தீர்வை எட்டும் வகையில் தொடர்ந்து பேசுவதற்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக மீன்பிடி தொழிலில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தத்தை மிக விரைவில் செய்து கொள்ளவும் இரு தரப்பும் சம்மதித்திருக்கின்றன. கடலின் தரை பகுதி வரை வலைவீசி மீன் பிடிக்கும் நவீன முறையை மீனவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago