முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துள்ளிக் குதித்த காளைகளுடன் காளையர்கள்

புதன்கிழமை, 18 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜன.- 18 - உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 500 -க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. அடக்க முயன்ற வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டு தை முதல் தினத்தன்று கடந்த 15- ம்தேதி அவனியாபுரத்திலும் 16 -ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன.  உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று காலை தொடங்கியது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியும், மாவட்ட நிர்வாகம் மற்றும் விலங்குகள் நல வாரியத்தின் நேரடி கண்காணிப்பிலும் அலங்காநல்லூர் கோட்டை முனிசாமி திடல் முன்பு ஜல்லிக்கட்டு தொடங்கியது. மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 559 காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன. அதுபோல மாடுகளை பிடிக்க 500 -க்கும் மேற்பட்ட இளைஞர்களும்  கலந்து கொண்டனர். அனைத்து காளைகளும் கால்நடை டாக்டர்களின் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன. அதுபோல மாடுபிடி வீரர்களுக்கும் டாக்டர்கள் உடல் பரிசோதனை நடத்திய பின்னர் அனுமதிக்கப்பட்டனர். முதலில் சாமி மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பின்னர் முரட்டுக்காளைகள் சீவிய கொம்புகளுடனும் மணிமாலையுடனும் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 

மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று காளைகளை அடக்க முயன்றனர். சில காளைகளின் உயர்ந்த திமில்களை பிடித்து வீர இளைஞர்கள் அடக்கினார்கள். அவர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. சில காளைகள்  பிடிக்க வந்த இளைஞர்களை தூக்கி பந்தாடிச் சொன்றன. வாடிவாசல் முன்பு மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க தென்னைநார்கள் பரப்பப்பட்டு இருந்தது. சுமார் 600 மீட்டர் நீளத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது ஒரு அடுக்கு இரும்பு கம்பி தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. 

ஜல்லிக்கட்டு விளையாட்டை காண பார்வையாளர்கள் அமர கேலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு பார்வையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இலவசமாக கேலரியில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பார்வையாளர்கள் அதிகாலை முதலே கேலரியில் இருக்க போட்டி போட்டு இடம் பிடித்தனர்.  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டை கண்டு ரசித்தனர். 

சீறிவந்த காளைகளை பிடித்த மூவேந்தன், ரஞ்சித் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அலங்காநல்லூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசுகள், கட்டில் பீரோ, செல்போன், சுவர் கடிகாரம், அண்டா, சைக்கிள், அயன் பாக்ஸ், குத்து விளக்குகள், புத்தாடைகள் பரிசாக வழங்கப்பட்டன.

போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டையொட்டி டாக்டர்கள் குழுவினருடன் ஆம்புலன்சுகள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்த விழாவில் கலெக்டர் சகாயம், எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, ஆர்.சாமி, முத்துராமலிங்கம், தமிழரசன், ராமசாமி, வீரவிளையாட்டுக்குழு தலைவர் ராஜசேகரன், அலங்காநல்லூர் யூனியன் தலைவர் கீதாரவிச்சந்திரன், துணைத்தலைவர் முத்துமாரிபாண்டியன், பேரூராட்சித் தலைவர் கீதா பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago