முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகை குண்டு வீச்சு எதிரொலி வெள்ளை மாளிகை மூடப்பட்டது

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஜன.- 19 - வெள்ளை மாளிகை மீது எதிர்ப்பாளர்கள் புகை குண்டை வீசினர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகை மூடப்பட்டது.  அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன்னில் வெள்ளை மாளிகை உள்ளது. இங்குதான் அமெரிக்க அதிபர்கள் குடும்பத்துடன் தங்கியிருப்பார்கள். தற்போது அதிபராக இருக்கும் ஒபாமாவும் குடும்பத்துடன் வெள்ளை மாளிகையில்தான் தங்கியுள்ளனர். கடந்த செவ்வாய் அன்று அதிபர் ஒபாமாவின் 48-வது பிறந்த தினத்தையொட்டி ஒரு விருந்துக்கு தன் குடும்பத்துடன் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளைமாளிகை கேட் முன் வந்து குவிந்தனர். அவர்களில் ஒருவர், வெள்ளை மாளிகையின் சுற்றுச்சுவர் மீது புகை குண்டை வீசினார். ஆனால் அந்த நபர் யார் என்று தெரியவில்லை என்று அமெரிக்க ரகசிய சர்வீஸ் அதிகாரி ஜார்ஜ் ஒஜில்வி தெரிவித்தார். புகை குண்டை வீசியதால் வெள்ளை மாளிகை மூடப்பட்டது என்றும் அவர் கூறினார். புகை குண்டு வீசிய து குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுவிட்டனர் என்றும் குண்டு வீசியது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் நடந்து வருகிறது. தீர்வுகாணும் வரை வெள்ளை மாளிகையில் வசிக்கும் ஊழியர்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அதிபர் ஒபாமாவும் அவரது துணைவியாரும் விருந்தை முடித்துக்கொண்டு வெள்ளைமாளிகைக்கு பத்திரமாக திரும்பிவிட்டனர் என்றும் ஜார்ஜ் கூறினார். ஆனால் அதிபருடன் வந்த பத்திரிகையாளர்கள் மீண்டும் திரும்பி செல்ல உடனடியாக அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் பத்திரிகையாளர்கள் அறையிலேயே சுமார் 45 நிமிடம் இருந்தனர். பின்னர் வேறுவழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் ஜார்ஜ் மேலும் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago