எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,பிப்.- 18 - மத்திய அரசு தொடங்க உள்ள பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்றாயக், பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் இணைந்துள்ளனர். உ,பி.முதல்வர் மாயாவதியின் கருத்து இதுவரை வெளிப்படவில்லை. இது குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் கூறியுள்ளதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மார்ச் 1ந்தேதி தொடங்குவதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த திட்டம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிப்பது போல் இருக்கிறது. அதனால் இத்திட்டத்தை கைவிடும்படி கடந்த பிப்.14ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த தகவலை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். இந்த அமைப்புக்கு எதிரான மம்தாவின் கருத்தை தான் ஆதரிப்பதாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் ஆலோனையும் நடத்தியுள்ளார். தற்போது இந்த பயங்கரவாத தடுப்பு அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, நிதீஷ்குமார், மற்றும் நவீன் பட்நாயக் ஆகிய 4 மாநில முதல்வர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு என்றும் பறிக்காது. மம்தா எழுதியாக கூறும் எதிர்ப்பு கடிதம் இதுவரை உள்துறை அமைச்சகத்துக்கு வந்து சேரவில்லை என்று கூறியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஒரு செய்தி குறிப்பிப்பை வெளியிட்டுள்ளது. பயங்கர வாதத் தடுப்பு மையம் தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலிதா பிரதமர்மன் மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: - இந்திய இறையாண்மையைக் கட்டிக் காப்பாற்றி உயர்த்திப் பிடிப்பதிலும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டை ஆதரிப்பதிலும் எனக்குள்ள அர்ப்பணிப்பு உணர்வை நீங்கள் அறிவீர்கள். எத்தகைய ஒரு சூழலிலும் இந்தியாவின் பாதுகாப்பு எத்தகைய சமரசத்திற்கும் உட்பட்டதல்ல என்ற நிலையில் சில விசயங்கள் குறித்து உங்களின் கவனத்தைச் செலுத்த விழைகிறேன். உள்துறை அமைச்சகம் கடந்த 3ம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் மத்திய புலனாய்வுத் துறையின் கீழ், தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் என்.சி.டி.சி ஒன்றை மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் என்.சி.டி.சி. யாரையும் கைது செய்யவோ, அவர்களின் இடத்தை சோதனை இடவோ முடியும்.மேலும் மாநிலத்திற்குள் தனி புலனாய்வுக் குழுவையும் அமைக்கும் அதிகாரம் அதற்குள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ் என்.சி.டி.சி அறிக்கைகள், ஆவணங்கள், சான்றாதாரங்கள், எந்தவிதமானதாலும், அத் தகவல்கள், எந்தஒரு நிறுவனத்திடமிருந்தும், அமைப்பிடமிருந்தும் இதற்குத் தேவையான தகவல்களை பெறும் அதிகாரத்தைப் பெறுகிறது.
இத்தகைய சூழலில், சில விஷயங்களில் உள்ள ரகசிய மாக வைத்திருக்க வேண்டிய தகவல்களை கூட அதற்கு அளிக்க வேண்டியதும் இருக்கும்.
இந்த சட்டப்பிரிவு, எந்தவிதமான பொதுப்புகளையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு அதிகாரத்தை அது பெறுகிறது.
யாரையும் கைது செய்வது, சோதனை செய்வது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது, பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது எடுக்கப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பலவிதமான செயல் முறைகள் இது வரை மாநில அரசின் உள்துறை செயலகத்திடம் இருந்தது. என்.சி.டி.சி.யின் இந்த விசேஷ அதிகாரத்தின் மூலம், மாநில உள்துறை செயலகத்திடம் இருந்த அதிகாரங்கள் இனி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் வசமும் என்.சி.டி.சி.யில் உள்ள மத்திய புலனாய்வு அதிகாரிகள் வசமும் கை மாறுகிறது, சுருக்கமாகச் சொல்லப்போனால் மத்திய மாநில இணைப்புப் புலனாய்வுக் குழுக்களை என்.சி.டி.சி அமைப்பானது, அமைப்பதின் மூலம் மாநில அரசின் உரிமைகளில் அது தலையிடுகிறது.
மேலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும், அதை யொட்டி எடுக்கும் நடவடிக் கைகளும் தமிழ்நாடு அரசு சிறப்பான சாதனைப் பட்டியலைக் கொண்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு எந்தவித மான பின்வாங்குதலும் இல்லாமல் முன்னோக்கி செய்கிறது.
என்னுடைய அனுபவத்தில் மாநில காவல் துறையும் புலனாய்வு அமைப்பும் எப்போதுமே தீவிரவாதிகளையும் அவர்களின் அமைப்புகளையும் ஒடுக்குவதில் சிறந்து விளங்குகிறது. அதற்காக மாநில காவல் துறையானது. நவீனப் படுத்தப்பட்டு செயல் படுகிறது. பல அசம்பாவித சம்பவங்களையும் தடுத்துள்ளது.
வெறும் ஒரு மையத்தை அமைப்பதும், தகவல்களைப் பெறு வது மட்டுமே அதனுடைய நோக்கத்தை அடைய முடியாது. அகையால் என்.சி.டி.சி. அமைப்பது குறித்த மாநிலங்களின் வேறுபாடுகளை நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். இவ்விஷயத்தில் பிறமாநில முதல்வர்களின் கருத்துடன் நானும் உடன் படுகிறேன்.
இவ்விஷயத்தில் தாங்கள் உடனடியாக கவனத்தை செலுத்த வேண்டும். மேலும் மாநில அரசுகளுடனும், மாநில போலீஸ் உயரதிகாரிகளுடனும் உடனடியாக கலந்து பேச வேண்டும் பயங்கவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற மிகுந்த முக்கியத்துவமுள்ள இவ்விஷயத்தில் மாநிலங்களில் கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல், தேசிய பயங்கரவாத தடுப்பு நடைமுறைகள் எப்படி செயல்பட முடியும்.
ஆகையால் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் உள்துறை அமைச்சகத்தின் அந்த அதிகார நடவடிக்கை, குறித்து உரிய நடவடிக்கையை தாங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
அவதூறு பரப்பும் வீடியோக்கள்: நீக்கக்கோரி யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்
23 Nov 2024சென்னை : அவதூறு பரப்பும் வீடியோக்கள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
-
பெர்த் முதல் டெஸ்ட் போட்டி: ஜெய்ஸ்வால், ராகுல் அபாரம்: வலுவான நிலையில் இந்தியா
23 Nov 2024பெர்த் : பெர்த் முதல் டெஸ்ட் போட்டி 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால், ராகுலில் அபார பேட்டிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 218 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி வலுவான நிலைய
-
தி.மு.க. யாருக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்தது கிடையாது : அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
23 Nov 2024திண்டுக்கல் : தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
-
14 மாநிலங்களில் 48 சட்டசபை இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்
23 Nov 2024புதுடெல்லி : இந்தியா முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
-
38 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய ஜோடி சாதனை
23 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் அடித்தனர்.
-
மகாராஷ்டிராவில் முதல்வர் யார் என்பதில் பிரச்சினை ஏதும் இல்லை : தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி
23 Nov 2024மும்பை : மகாராஷ்டிராவில் முதல்வர் யார் என்பதில் பிரச்சினை இல்லை என்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
-
ஒரு வருடத்தில் அதிக சிக்சர்: டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் சாதனை
23 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 2 சிக்சர்கள் அடித்தன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர் அடித்து புதி
-
2 மாநில தேர்தல் முடிவுகள் வெளியீடு: மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி : ஜார்கண்ட்டில் ஜே.எம்.எம். கூட்டணி வெற்றி
23 Nov 2024மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடவும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
-
பீகார் இடைத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி
23 Nov 2024பாட்னா : பீகார் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
-
மல்லிகார்ஜூனா கார்கேவிடம் வாழ்த்து பெற்ற பிரியங்கா காந்தி
23 Nov 2024புதுடெல்லி : பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
இன்று ஐ.பி.எல். மெகா ஏலம்
23 Nov 2024ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-11-2024
24 Nov 2024 -
நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி
23 Nov 2024மும்பை : சட்டசபை தேர்தல் வெற்றிக்காக மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
-
வெளிநாட்டுகளில் அதிக விக்கெட்கள்: ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
23 Nov 2024பெர்த் : வெளிநாட்டுகளில் அதிக விக்கெட்கள் கைப்பற்றி, சுமார் 78 சதவீதம் வெளிநாட்டு மண்ணில் விக்கெட்களை கைப்பற்றியவர் என்ற சாதனையை ஜஸ்ப்ரிட் பும்ரா படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-11-2024
24 Nov 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-11-2024
24 Nov 2024 -
விடுமுறை நாள்: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
24 Nov 2024திருவனந்தபுரம் : விடுமுறை நாளான நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
24 Nov 2024சென்னை : தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்
24 Nov 2024புதுடெல்லி : அதானி விவகாரம் குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று டெல்லியில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட
-
தனது திருவுருவ சிலையை தானே திறந்து வைத்த மே. வங்க கவர்னர்
24 Nov 2024கொல்கத்தா : 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கு வங்க கவர்னராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்ட
-
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி
24 Nov 2024பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெரூட்டில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
-
அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் இங்கிலாந்து மன்னர்
24 Nov 2024லண்டன் : இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் விரைவில் இந்தியா வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தேசிய மாணவர் படையில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும் : பிரதமர் மோடி அழைப்பு
24 Nov 2024புதுடெல்லி : தேசிய மாணவர் படையில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும்.
-
இந்தியாவின் வாக்கு எண்ணும் முறை: எலான் மஸ்க் பாராட்டு
24 Nov 2024வாஷிங்டன் : இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு விட்டன.
-
இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம்: பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்
24 Nov 2024இஸ்லாமாபாத் : இம்ரான்கானை விடுதலை செய்யக் கோரி அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்படு