முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவத்திற்கு புதிய தளபதியாக பிக்ரம்சிங் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மார்ச். - 5 - இந்திய ராணுவத்துக்கு புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பிக்ரம்சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  வி.கே. சிங்கின் பதவிக் காலம் மே மாதம் 31 ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் தனது பிறந்த தேதி மே 10, 1951  என்றும் மேலும் ஓராண்டு பதவியில் நீடிக்க தகுதியுள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் அவரது பதவி நீட்டிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. தற்போது புதிய ராணுவ தலைமை தளபதியாக கிழக்கு பிராந்திய ராணுவ தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பிக்ரம்சிங் பதவியேற்பார் என்று ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  பிக்ரம்சிங்கிற்கு வயது 59. தற்போதைய தலைமை தளபதி வி.கே.சிங், வருகிற மே 10 ம் தேதி ஓய்வு பெற்றதும் புதிய தலைமை தளபதியாக பிக்ரம்சிங் பதவியேற்பார். 2014 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அவர் தலைமை பதவியில் இருப்பார் என்று ராணுவ தலைமை அமைச்சக அதிகாரி தெரிவித்தார். புதிய தலைமை தளபதி நியமனம் 60 நாட்களுக்கு முன்னர்தான் வழக்கமாக அறிவிக்கப்படும். ஆனால் பிக்ரம் சிங் விஷயத்தில் 90 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago