Idhayam Matrimony

சதத்தில் சதம் கண்டு சச்சின் புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 17 - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியி ல் வங்கதேசத்திற்கு எதிராக மிர்பூரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான டெண்டு ல்கர் புதிய உலக சாதனை படைத்து இருக்கிறார். காம்பீருடன் இணைந்து இந்திய அணியின் இன்னிங்சைத் துவக்கிய டெண்டுல்கர் 147 பந்தில் 114 ரன்னை எடுத்தார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் 100 - வது சதமாக அமைந்தது. 

இந்த 100 - வது சதத்திற்காக அவர் நீண்ட காலம்காத்திருக்க வேண்டியதாயிற் று. மே.இ.தீவுக்கு எதிரான தொடர், இங்கிலாந்திற்கு எதிரான தொடர், மற் றும் ஆஸி. க்கு எதிரான தொடர் ஆகிய வற்றில் அவர் ஏமாற்றம் தந்தார். 

20 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க் கையில் பல்வேறு உலக சாதனைகளை சச்சின் படைத்து இருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து முதலிடத்தில் இருக் கிறார். 

தவிர, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இரண்டிலும் சேர்த்து அவர் மொத்தம் 99 சதம் அடித்து இருந்தார். அவரது 100 -வது சதத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதனை தற்போது டெண்டுல்கர் நிறைவேற்றி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago