எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.- 19 - தமிழக பட்ஜெட் வரும் மார்ச்.26-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2012-2013-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த புதிய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், சலுகைகள், அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து விபரம் வருமாறு:- விடுமுறை நாளான நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை அன்றும்) முதலமைச்சர் ஜெயலலிதா துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டார்.நேற்று முதலமைச்சர் ஙீஜெயலலிதா பல்வேறு துறைகள் சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 1 மாதம் நடைபெறும்.கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி தமிழக சட்டசபையில் கவர்னர் ரோசய்யா உரை நிகழ்த்தினார்.கவர்னர் உரையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வறுமையை போக்க ஒருங்கிணைந்த திட்டம், 2-ம் பசுமை புரட்சி, மின் உற்பத்தி திட்டங்கள்,மோனோ ரெயில் திட்டம், புதிய பேருந்துகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலைகள், சூரிய மின்சக்தி வசதியுடன் ஆண்டுக்கு 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டும் திட்டம் உட்பட ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கவர்னர் உரை மீது பிப்ரவரி 4 -ந்தேதி வரை விவாதம் நடைபெற்றது.அன்னைய தினம் முதலமைச்சர் ஜெயலலிதா விரிவான பதில் அளித்தார்.அனைவரும் அசந்து போகும் அளவுக்கு முதல்வர் அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.தானே புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள், திட்டங்களை அவர்களது மனம் குளிரும்படி, மகிழ்ச்சி அடையும் வகையில் வெளியிட்டார்.அந்த மாவட்டங்களுக்கு 790 கோடி ரூபாய் அளவுக்கு சிறப்பு தொகுப்பு திட்டங்களை அறிவித்தார். முந்திரி, பலா,மா,போன்ற பயிர்களுக்கு 5 ஆண்டு வரை பராமரிப்பு செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் அறிவித்தார். 1 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். மின்பற்றாக்குறைக்கு கடந்த தி.மு.க.ஆட்சியே காரணம் என புள்ளி விவரங்களுடன் விளக்கிய முதலமைச்சர் வரும் ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின்வெட்டு குறையும் என்றும் அறிவித்தார். இதனை அடுத்து பட்ஜெட் தயாரிப்பு பணியில் முதலமைச்சர் ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டார். ஒவ்வொரு துறை வாரியாக முதலமைச்சர் ஜெயலலிதா ஆய்வு கூட்டங்களை நடத்தினார்.இதுவரை நடந்துள்ள பணிகள் என்ன? இனி செய்ய வேண்டிய பணிகள் என்ன?புதிய திட்டங்கள், சலுகைகள் என அனைத்தையும் விரிவாக முதலமைச்சர் ஆராய்ந்தார். ஞாயிற்றுக்கிழமை தலைமை செயலகத்துக்கு முதலமைச்சர் வந்து இந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.அனைத்து புள்ளி விவரங்களையும் விரல்நுணியில் வைத்திருந்து அதிகாரிகளுடன் கேள்வி கேட்டார்.முதலமைச்சரின் நிர்வாக திறன், நினைவாற்றல்,தொலைநோக்கு பார்வையுடன் சொல்லிய திட்டங்கள், ஏழை, எளிய மக்கள் நிலைமைகளை புரிந்து செய்ய வேண்டிய காரியங்கள் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கள்,ஆலோசனைகள்.முடிவுகள் கேட்டு ஒவ்வொரு அதிகாரியும் அசந்து விட்டனர். வியப்படைந்தனர். இப்படிப் பட்ட முதலமைச்சரின் கீழ் பணியாற்று வதை அதிகாரிகள் பெருமையாக நினைக்கிறார்கள்.
ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து நிதானித்து முதலமைச்சர் ஜெயலலிதா பட்ஜெட்டை தயாரிக்க உதவியுள்ளார்.
2012-2013-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் வரும் 26-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபை செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.26-ந் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்தபின், அன்று அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது? எந்தெந்த மானிய கோரிக்கை மீது எத்தனைநாள் விவாதம் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
27-ந் தேதி முதல் பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதத்துக்குப் பின் இறுதியாக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார். அநேகமாக 30-ந் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் இருக்கும். அன்றைய தினம் ஒ.பன்னீர் செல்வம் பதில் அளிப்பார் என்று தெரிகிறது.
ஏப்ரல் 2-ந் தேதி முதல் தொடர்ந்து ஒவ்வொரு மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். இறுதியில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்று சபை அனுமதி அளிக்கும்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் அநேகமாக 1 மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 5 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-04-2025.
03 Apr 2025 -
வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
03 Apr 2025புதுடெல்லி, வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார்.
-
அன்னை இல்லம் விவகாரம்: ராம்குமாருக்கு உதவ முடியாது: நடிகர் பிரபு தரப்பு கைவிரிப்பு
03 Apr 2025சென்னை, நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணையில், ராம்குமாருக்கு உதவ நடிகர் பிரபு தரப்பில் மறுப்புத்
-
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஐகோர்ட் கிளை தடை: ஐ.ஐ.டி. குழு ஆய்வு செய்ய உத்தரவு
03 Apr 2025தென்காசி, கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
தாய்லாந்தில் முகமது யூனுஸுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை
03 Apr 2025பாங்காக், தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பிம்ஸ்டெக் உச்சிமாட்டின் இடையே வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத
-
அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும்: மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி
03 Apr 2025புதுடெல்லி, அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
-
குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்
03 Apr 2025புதுடெல்லி, வக்பு சொத்துகளை அபகரித்ததாக குற்றம்சாட்டிய அனுராக் தாகுர் அதனை நிரூபிக்க வேண்டும்.
-
திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் ரூ.3.65 கோடியில் புதிய கட்டிடங்கள்: துணை முதல்வர் திறந்து வைத்தார்
03 Apr 2025சென்னை, திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் ரூ.3.65 கோடியில் புதிய கட்டிடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு
03 Apr 2025சென்னை, பண்ருட்டி பலாப்பழம் உட்பட தமிழகத்தில் மேலும் ஆறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
-
அரசியலமைப்பு மீதான தாக்குதல்: வக்பு திருத்த மசோதாவுக்கு சோனியா காந்தி எதிர்ப்பு
03 Apr 2025புதுடெல்லி: வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் நேற்று நள்ளிரவில் நிறைவேறியது.
-
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம்
03 Apr 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.
-
நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை எம்.பி திடீர் சந்திப்பு மத்திய அமைச்சர் பதவிக்காக சந்திப்பா? அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
03 Apr 2025சென்னை, மத்திய அமைச்சர் பதவிக்காக நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீரங்கம் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
03 Apr 2025ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா கொடியேற்றம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
-
ஆன்மீகத்தோடு தொடர்புடையது:தாய்லாந்துடனான உறவு குறித்து பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
03 Apr 2025பாங்காக்: ராமாயணம் உண்மையிலேயே ஆசியாவின் பல பகுதிகளில் உள்ள இதயங்களையும் பாரம்பரியங்களையும் இணைக்கிறது என்று தெரிவித்த பிரதமர் மோடி தாய்லாந்துடனான உறவு ஆன்மீகத்தோடு தொட
-
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
03 Apr 2025புதுடெல்லி: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
-
சாய் சுதர்ஷனுக்கு பாராட்டு
03 Apr 2025அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் சாய் சுதர்ஷனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தமிழக வீரர்...
-
சட்டசபைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை
03 Apr 2025சென்னை: தமிழக சட்டசபைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்தனர்.
-
ஏப்ரல் 11-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா
03 Apr 2025ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நேற்று காலை 11 மணிக்கு கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுப்பு
03 Apr 2025விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்திற்கு நிதி பெறுவது தொடர்பாக பிரதமர் மோடியைஅமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பார் துணை முதல்வர் உதயநிதி தகவல்
03 Apr 2025சென்னை: தமிழகத்திற்கு நிதி பெறுவது தொடர்பாக பிரதமர் மோடியைஅமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உயிரோடு தான் இருக்கிறேன்: யூடியூப் நேரலையில் தோன்றி சாமியார் நித்யானந்தா விளக்கம்
03 Apr 2025அகமதாபாத்: பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினா
-
ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 16 நாள்கள் விடுமுறை
03 Apr 2025மும்பை, நாட்டில் உள்ள வங்கிக ளுக்கு 2025 ஏப்ரல் மாதத்தில் 16 நாள்கள் விடுமுறை வருகிறது.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 50-க்கும் மேற்பட்டோர் பலி
03 Apr 2025காஸா: காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மும்பை வீரருக்கு அழைப்பு
03 Apr 2025ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல நகரங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
-
புதிய வரிகளை உடனடியாக நீக்க அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்
03 Apr 2025பெய்ஜிங்: அமெரிக்கா சமீபத்தில் விதித்திருக்கும் வரிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.