முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் வழிபாட்டு தலங்களின் சேத விபரங்களை கேட்கிறது

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுலை10 - குஜராத் கலவரத்தின்போது மத வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் அவற்றின் சேத விபரங்களை தெரிவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பெரும் வகுப்பு கலவரம் ஏற்பட்டது. அப்போது இந்த கலவரத்தில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். மேலும் மத வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சில வழிபாட்டு தலங்கள் முழுமையாகவும் சில வழிபாட்டு தலங்கள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. இந்த வழிபாட்டு தலங்களின் சேத விபரங்களை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை அளிக்கும்படி குஜராத் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. சேதமடைந்த வழிபாட்டு தலங்களை பழுதுபார்க்கவும், புதிதாக கட்டவும் எவ்வளவு செலவாகும் என்ற விபரத்தையும் தெரிவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக்மிஸ்ரா ஆகியோர் தங்களது உத்தரவில் கேட்டுக்கொண்டுள்ளனர். 

குஜராத் கலவரத்தின்போது வழிபாட்டு தலங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே குஜராத் ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த நஷ்டஈட்டை வழங்குவதற்கு போதுமான பணம் அரசு கஜானாவில் இல்லை என்று குஜராத் அரசு கூறிவிட்டது. மேலும் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு சார்பில்  மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தது. மத வழிபாட்டு தலங்களுக்கு ஏற்பட்ட சேத மதிப்பு எவ்வளவு? அந்த சேதத்தை சரிக்கட்ட ஆகும் செலவு எவ்வளவு என்ற விபரங்களை தெரிவிக்குமாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர். சேதப்படுத்தப்பட்ட மத வழிபாட்டு தலங்களை சீரமைக்க பொதுமக்கள் பணத்தை பயன்படுத்துவது குறித்து தாங்கள் ஆய்வு செய்ய இருப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஒரு வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலோ  அல்லது பூகம்பத்தினால் சேதமடைந்தாலோ அந்த வீட்டிற்கு நஷ்ட ஈடு கொடுக்கும்போது சேதப்படுத்தப்பட்ட மத வழிபாட்டு தலங்களுக்கு ஏன் நஷ்ட ஈடு தரக்கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இது தொடர்பாக மத வழிபாட்டு தலங்களின் சேத விபரங்களையும் அவற்றை சீரமைக்க ஆகும் செலவு விபரங்களையும் பதில் அறிக்கையாக கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜுலை 30 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago