எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.- 17 - உலகத் தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில், இந்தியாவில் எந்த பகுதியிலும் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது, அவர்களை உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்து அவர் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- போர்க் குற்றங்கள் செய்தவர்களை ஐ.நா சபையுடன் சேர்ந்து போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தியும், இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மறுகுடியமர்ப்பு செய்ய வேண்டும் என்றும், சிங்கள குடிமக்களுக்கு இணையாக தமிழர்களும் சமமான அரசியல் சட்ட உரிமைகளுடன் கெளரவமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, 2011 ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த தீர்மானத்தை செயல்படுத்தாத வகையிலும், இலங்கை பாதுக்காப்பு துணை இராணுவ அதிகாரிகளுக்கு தொழிற்நுட்ப பயிற்சி அளிப்பதனாலும், மத்திய அரசு உலகெங்கும்முள்ள தமிழர்களின் உணர்வுகளை புறக்கணிப்பதாகவும், அவமரியாதை செய்வதாகவும் எண்ண வைக்கிறது. தமிழ்நாட்டில் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் 9 இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தபோது, இந்திய அரசின் இந்த செயலை கண்டித்து, இலங்கை ராணுவ அதிகாரிகள் உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நான் பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட்டேன். இலங்கைக்கு அவர்களை திருப்பி அனுப்புவதற்கு பதிலாக பெங்களூரூ, ஏலகாகெ விமானப்படை தளத்தில் இந்திய அரசு பயிற்சி அளித்து வருகிறது. மேலும், இலங்கை விமானப்படையை சேர்ந்த ஏர்வைஸ்மார்சல் ஜெகத் ஜூலங்கா ரடயஸ் மற்றும் இலங்கை கப்பல்படையை சேர்ந்த ரியர் அட்மிரல் எஸ்.ரணசிங்கே இருவரும் பல நாடுகளை சேர்ந்த 25 பயிற்சியாளர்களுடன் புதுடெல்லி தேசிய பாதுகாப்பு கல்வி கழகத்தில் பயிற்சி பெறுவதாகவும், பயிற்சியின் ஒரு பகுதியாக அவர்கள் 15.7.12 அன்று நீலகிரி மாவட்டம் கூனூருக்கு வந்திருப்பதாகவும், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சி கல்லூரியை 16.5.12 அன்று பார்வையிடுவதாகவும் நான் அறிகிறேன். இந்தியாவிலுள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறுவனங்களில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதும், தமிழகத்திற்கு வருகை தர அனுமதிப்பதும், தமிழக மக்களை முற்றிலும் அவமதிப்பதையே வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கும் இந்திய அரசின் மோசமான பிடிவாதமான செயல்களை கண்டு தமிழக மக்கள் விரக்தியும், கோபமும் அடைந்துள்ளனர். ஆகையினால் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும், இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
பெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: இந்திய அணி பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறல் : முதல் நாளில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது
22 Nov 2024பெர்த் : பெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. முதல் நாளில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
-
ஆசிரியையை கொலை செய்தது ஏன்? - காதலன் வாக்குமூலத்தால் பரபரப்பு
22 Nov 2024தஞ்சை : ஆசிரியை ரமணியை அவரது காதலன் மதன்குமார் பள்ளிக்குச் சென்று சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவத்தில், கொலை குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள
-
மாநாட்டில் நடிகர் விஜய் பேச்சு: எஸ்.ஏ.சந்திரசேகர் புகழாரம்
22 Nov 2024சென்னை, தவெக மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து என்னை அறியாமல் கை தட்டிவிட்டேன் என்று எஸ்.ஏ.சி சந்திரசேகர் கூறியுள்ளார்.
-
மக்களை தேடி மருத்துவம்: 2 கோடியே ஒன்றாவது பயனாளிக்கு விழுப்புரத்தில் 29-ம் தேதி மருந்து பெட்டகம் வழங்குகிறார் முதல்வர்: தமிழ்நாடு அரசு தகவல்
22 Nov 2024சென்னை, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியே ஒன்றாவது பயனாளிக்கு வரும் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மருந்து பெட்டகத்தினை முதல்வர் மு.
-
ஷமி குறித்து பும்ரா பதில்
22 Nov 2024முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இரு அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக இணைந்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர்.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகிறது
22 Nov 2024சென்னை, தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு வரும் நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் த.வெ.க.
-
72 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வரலாறு: முதல் நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தது இதுவே முதல்முறை
22 Nov 2024பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 72 ஆண்டுகால வரலாறு உடைக்கப்பட்டுள்ளது.
-
மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் காங்கிஸ் ஆட்சி அமைக்கும்: மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை
22 Nov 2024மும்பை, மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரில் நிலநடுக்கம்
22 Nov 2024இம்பால், மணிப்பூரில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-11-2024.
23 Nov 2024 -
அரசு முறை பயணத்தில் தலைவர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கிய பிரதமர் நரேந்திரமோடி
22 Nov 2024புதுடெல்லி, நைஜீரியா, பிரேசில், கயானா சுற்றுப்பயணத்தின் போது தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசுப் பொருள்களை வழங்கினார்.
-
ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம்: தமிழக அரசாணை வெளியீடு
22 Nov 2024சென்னை, ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
குடும்பத்தகராறில் பெண் போலீஸ் வெட்டிக்கொலை : தப்பி ஓடிய கணவனுக்கு வலை
22 Nov 2024திருவனந்தபுரம் : கேரளாவில் குடும்பத்தகராறில் பெண் போலீசை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்கொன்று தப்பி ஓடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
-
தொடர்ந்து 5-வது நாளாக அதிகரிப்பு: ரூ.58 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை
22 Nov 2024சென்னை, சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் அதிகரித்துள்ளது தங்கம் விலை. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது.
-
ஷமி குறித்து பும்ரா பதில்
22 Nov 2024முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இரு அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக இணைந்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர்.
-
தங்கம் விலை தொடர்ந்து 6-வது நாளாக அதிகரிப்பு
23 Nov 2024சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று (நவ. 23) சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையான நிலையில் தொடர்ந்து 6-வது நாளாக விலை உயர்வு தொடர்கிறது.
-
உ.பி. கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: டிச. 13-ல் பிரதமர் மோடி பிரயாக்ராஜ் செல்கிறார் : 3,000 சிறப்பு ரயில்கள் இயக்கம்
23 Nov 2024புதுடெல்லி : உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் ஜனவரியில் தொடங்கும் மகா கும்பமேளா ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி டிசம்பர் 13-ம் தேதி பிரயாக்ராஜ் செல்கிற
-
வன்முறை அதிகரிப்பு: மணிப்பூருக்கு விரைந்த 20 ஆயிரம் ராணுவ வீரர்கள்
23 Nov 2024இம்பால் : மணிப்பூரில் வன்முறை மீண்டும் அதிகரித்து வருவதால், 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
-
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்? - ஏக்நாத் ஷிண்டே பதில்
23 Nov 2024தானே : பா.ஜ.க.
-
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக உயர்த்த தேவஸ்தானம் முடிவு
23 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை தினசரி 80 ஆயிரமாக அதிகரிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
-
மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது: உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி ஜலுஷ்னி கருத்து
23 Nov 2024கீவ் : ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப்போர் தொடங்கி விட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான
-
அமெரிக்காவின் அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது : அதானி குழும தலைமை நிதி அதிகாரி கண்டனம்
23 Nov 2024புதுடெல்லி : அதானி குழுமத்தின் 11 பொது நிறுவனங்களில் எந்த நிறுவனமும் எந்த தவறும் செய்யவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை என அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகே
-
திருப்பதியில் பழமை வாய்ந்த ராமர் சிலை சீரமைப்பு
23 Nov 2024திருப்பதி : திருப்பதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமர் சிலை ஆகம முறைப்படி சீரமைக்கப்பட்டுள்ளது.
-
4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வயநாட்டில் பிரியங்கா வெற்றி
23 Nov 2024வயநாடு : வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இதற்கு முன் அங்கு வெற்றி பெற்ற ராகுல் காந்தியின் சாதனையை
-
கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு : நாளைக்குள் விண்ணப்பிக்க கெடு
23 Nov 2024சென்னை : கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நாளை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.