முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி லியாண்டர் - சானியா ஜோடி புதியவியூகம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. - 17 - லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க லியாண்டர் பயஸ் மற் றும் சானியா ஜோடி புதிய வியூகம் அமைத்து வருகிறது. இது பற்றிய விப ரம் வருமாறு -  இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் அடுத்த வாரம் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருக்கிறது. இதற் காக பிரமாண்ட ஏற்பாடுகளை நிர்வா கம் செய்து வருகிறது.  விளையாட்டு வீரர்களின் மிகப் பெரிய திருவிழாவான ஒலிம்பிக்கில் சாம்பிய ன் பட்டம் பெற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தியா சார்பில் டென்னிஸ் பிரிவில் பங்கேற்க 7 பேர் கொண்ட குழு அனுப் பப்பட்டு உள்ளது. இந்தக் குழுவிற்கு கேப்டனாக எஸ். பி. மிஸ்ரா நியமிக்க ப்பட்டு இருக்கிறார்.  லண்டன் ஒலிம்பிக் போட்டியில் டென் னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய அணி சார்பில் 2 ஜோடி பங்கேற்கிறது. மகேஷ் பூபதியும், ரோகன் பொபண்மாவும் ஒரு ஜோடியாக ஆடுகின்றனர்.  இந்தியாவின் இரட்டையர் ஸ்பெசலிஸ் டுகளில் ஒருவரான லியாண்டர் பயசுட ன் ஜூனியர் வீரரான விஷ்னு வர்த்தன் இணைந்து ஆடுகிறார். இதற்கு பயஸ் முதலில் மறுப்பு தெரிவித்த போதிலு ம், பின்பு ஆட ஒப்புக் கொண்டு இருக் கிறார்.  கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயசும், நட்சத்திர வீராங்கனையா  ன சானியா மிர்சாவும் இணைந்து ஆடு கின்றனர். இதற்காக அவர்கள் ஆயத்த மாகி வருகின்றனர். 

லியாண்டர் பயஸ் மற்றும் சானியா மிர்சா ஜோடி இதற்கு முன்பாக 2006-ம் ஆண்டு டோகாஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்க ம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் 2010 -ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இந்த ஜோடி காலிறுதியி ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காலின் பிளமிங் மற்றும் ஜோசலின் ரே இணையி டம் தோற்று வெளியேறியது. 

7 பேர் கொண்ட இந்திய டென்னிஸ் குழு வரும் 23-ம் தேதி கேப்டன் மிஸ் ரா தலைமையில் லண்டனில் கூடி ஒலி ம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து விவாதிக்க உள்ளது. 

2010 -ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிக்கு பிறகு, இந்தியாவின் மூத்த வீர ரான லியாண்டர் பயசும், சானியா மிர்சாவும் இணைந்து லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆட உள்ளனர். 

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆடுகளத்தின் வலது புறத்தில் இருந்து யார் ஆடுவது, இடது புறத்தில் இருந்து யார் ஆடுவது என்பதை லியாண்டர் மற்றும் சானியா இருவரும் இனிமேல் முடிவு செய்ய உள்ளனர் என்று மிஸ்ரா தெரிவி த்தார். 

லியாண்டர் பயஸ் இதுவரை நவரத்தி லோவா முதல் லிசா ரேமண்ட் வரை பல்வேறு பார்ட்னர்களுடன் இணைந்து ஆடி இருக்கிறார். ஆனால் இதுவரை அவர் ஆடுகளத்தின் வலது புறத்தில் இருந்து தான் ஆடி இருக்கிறார் என்றும் இதுவே அவருக்கு பலம் என்றும் மிஸ் ரா கூறினார். 

---------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago