தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் மீனவர் சுட்டுக்கொலை: வைகோ - தே.மு.தி.க. கண்டனம்

புதன்கிழமை, 18 ஜூலை 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 18 - தமிழக மீனவர்கள் நமது கடலில் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படும் துன்பம் தொடர்கையில், பிழைப்பதற்காக வேறு நாடுகளுக்குச் சென்று, சட்டப்படியான ஒப்பந்தப்படி கடலில் மீன்பிடிக்கும்போதும் சுட்டுக் கொல்லப்படும் கொடுமை, தமிழனுக்கு இதுதான் தலைவிதியா என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவுக்குப் பொருள்களைக் கொண்டு சென்ற கப்பலின் பாதுகாப்புப் படையினர், துபாய் கடல்பரப்பில் சிறிய படகில் இருந்து மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டதில், இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் சேகர் கொல்லப்பட்டார்; அவருடன் இருந்த இராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி முள்ளுமுனையைச் சேர்ந்த கண்ணன் என்ற பண்புவன், முருகன் ஆகிய மூவரும் படுகாயமுற்றனர். பன்னாட்டு கடல்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் அத்துமீறி நடத்திய இக்கொலை வெறித் தாக்குதலை ம.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சம்பவத்துக்கு அமெரிக்க கடற்படை வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, இந்தக் கொலை வெறித்தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக, அந்த மீன் பிடிப்படகு தங்கள் கப்பலுக்கு அருகில் நெருங்கி வந்ததாகவும், வாய்மொழியாக எச்சரித்தும், வான்வெளியில் சுட்டபின்னரும், படகு கப்பலை நெருங்கி வந்ததாகவும், அதனால் எந்திர துப்பாக்கியால் சுட்டதாகவும், அமெரிக்க கடற்படையினர் கூறுவது திமிர்வாதம் ஆகும். வேடிக்கைக்காகவும், கேளிக்கைப் பொழுது போக்குக்காகவும், அவர்கள் தமிழக மீனவர்கள் உயிரை மிக அற்பமாக கருதி சரமாரியாக சுட்டு உள்ளனர். பெரும் தாக்குதல் நடத்தக் கூடிய நவீன போர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ள கப்பலில் இருந்து கொண்டு சின்னஞ்சிறிய மீன்படி படகு மீது எந்திர துப்பாக்கிகளால் சுட்டது மன்னிக்க முடியாத கொடுஞ்செயல் ஆகும். தமிழக மீனவர்கள் நமது கடலில் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படும் துன்பம் தொடர்கையில் பிழைப்பதற்காக வேறு நாடுகளுக்கு சென்று சட்டப்படியான ஒப்பந்தப்படி கடலில் மீன்பிடிக்கும்போதும் சுட்டு கொல்லப்படும் கொடுமை, தமிழனுக்கு இதுதான் தலைவிதியா? என்ற கேள்வியை எழுப்புகிறது. கேரள கடல் எல்லையில் 2 கேரளத்தினரை சுட்டுக் கொன்ற இத்தாலிய வணிக கப்பலின் காவலர்களை, சட்டப்படி கைது செய்து கூண்டில் நிறுத்தியதற்கே இத்தாலி அரசு, கண்டனமும், எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு இதுவரையிலும் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. தமிழர்கள் உயிர் என்றால், மத்திய அரசுக்கு கிள்ளுக்கீரைதான் போலும். தமிழக மீனவர் உயிரை பறித்த அமெரிக்க கப்பல் காவலர்களை, அமெரிக்க அரசு கைது செய்து நட வடிக்கை எடுக்கவும், பாதிக் கப்பட்ட மீனவர்கள் குடும்பத் துக்கு தக்க நிவாரணம் வழங்க வும் மத்திய அரசு உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வைகோ அதில் கூறியுள்ளார். உடனடி நிவாரணம் கிடைக்க தேமுதிக வலியுறுத்தல்
தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கிடைக்க செய்யவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago