முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கிய பொறுப்பில் அமெரிக்க இந்தியர்...!

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை. 27 - அமெரிக்க வாழ் இந்திய பெண்மணிக்கு பெருமை மிக்க தேசிய கவுன்சில் உறுப்பினர் அந்தஸ்தை அதிபர் ஒபாமா வழங்கியுள்ளார்.  இது போன்ற பொறுப்புகளுக்கு ஆறுக்கும் மேற்பட்டவர்களை நியமித்து பட்டியலை வெளியிட்டுள்ள அதிபர் ஒபாமா, அமெரிக்காவின் முக்கிய நிர்வாக பிரச்சினைகளை எதிர்கொள்ள இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இவர்களுடன் பல ஆண்டுகள் இணைந்து செயல்பட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அமெரிக்கவாழ் இந்திய பெண்மணி ராணிராமசாமி தேசிய கவுன்சில் கலைப் பிரிவு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ராகமாலா நாட்டிய நிறுவனத்தின் நிர்வாகியான ராணிராமசாமி, 1978 ம் ஆண்டு முதல் பரத நாட்டியம் பயிற்றுவித்து வருகிறார். வாக்கர் ஆர்ட்ஸ் சென்டர், அமெரிக்கன் கம்போசர்ஸ் போரம், மினியோபொலிஸ் இன்ஸ்டியூட் ஆப் ஆர்ட்ஸ் உள்ளிட்ட அமைப்புகளால் பாராட்டப்பட்டவர் இவர். அமெரிக்க நாட்டிய திருவிழா மும்பை தேசிய நிகழ்த்து கலை மைய நிகழ்வுகளின் போது நிகழ்த்து கலைக்கான கென்னடி மையம், ராணிராமசாமியின் நாட்டியத்தை வெகுவாக பாராட்டியுள்ளது. இவர் 14 மெக்நைட் நிற விருதுகள், புஷ் அறக்கட்டளை நாட்டிய விருது, சர்வதேச கலை மையத்தின் நிதி, 2011 ம் ஆண்டுக்கான மெக்நைட் சிறந்த கலைஞருக்கான விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார். ராணிராமசாமி சென்னை பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago