முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் 23 பேர் விடுதலை

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம், ஜூலை. 28 - இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா பிரதமரை வலியுறுத்தியதால் மீனவர்கள் 23 பேரையும் நேற்று இலங்கை அரசு விடுதலை செய்தது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21 ம் தேதி படகுகளில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மோட்சம், செல்லதுரை, முருகன், ஜஸ்டின் ஆகியோருக்கு சொந்தமான 5 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் படகில் இருந்த மீனவர்கள் ராஜூ, சூலியான்ஸ், விவால்டன், எஸ்ரோம், கிறிஸ்டோபர், பாலமுருகன், மாரி, பஞ்சவர்ணம், முருகன், சுப்பிரமணி, முருகேசன், திருமுருகன், முனியசாமி, மாயமுருகன், நம்புராஜன், முத்துமாணிக்கம், அண்ணாமலை, முருகன், அந்தோணி சிலுவை, கருப்பையா, நசீர், கோவிந்தன் உள்ளிட்ட 23 பேரையும் கைது செய்து தலைமன்னார் போலீசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். 

இதன் பின்னர் கடந்த 22 ம் தேதி மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி வரை அனுராதபுரம் சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மீனவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கை தொடர்ந்து வலியுறுத்தியும், கடிதமும் எழுதினார். அதன்படி மீனவர்களை விடுதலை செய்யும்படி மத்திய அரசு இலங்கை அரசை கேட்டுக் கொண்டது. 

இந்த நிலையில் நேற்று மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்ற நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன் உத்தரவிட்டார். இம்மீனவர்கள் 5 படகுடன் ஓரிரு தினங்களில் இந்திய கடலோர காவல் படை மூலம் பாதுகாப்புடன் ராமேஸ்வரம் கரைக்கு திரும்ப உள்ளதாகவும், மீனவர்கள் 23 பேரும் வெகு விரைவில் விடுதலை செயப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவுதான் காரணம். அதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

முதல்வர் ஜெயலலிதா முயற்சி வெற்றி:

முதல்வர் ஜெயலலிதா எடுத்த தொடர் முயற்சிகளை அடுத்து தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

21.7.2012 அன்று மீன்பிடிப்பதற்காக ஐந்து படகுகளில் புறப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 22.7.2012 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சார்ந்த 23 மீனவர்களையும், 5 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், தங்களது வாழ்வாதாரத்திற்காக இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை சிறைபிடிக்கக் கூடாது என இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்துமாறு இலங்கை அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் 23.7.2012 நாளிட்ட கடிதத்தில் பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டார். 

மேலும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு சிறையிடப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவினையடுத்து, தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் சிறை பிடிக்கப்பட்ட 23 மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து முயற்சி எடுத்தனர்.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடனடி நடவடிக்கையினையடுத்து, 22.07.2012 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23  மீனவர்கள் மன்னார் குற்றவியல் நடுவர் திமன்றத்தால் நேற்று (27.7.2012)  விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago