முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் இரட்டை நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

டெஹ்ரான்,ஆக.- 13 - ஈரான் நாட்டில் ஏற்பட்ட இரட்டை பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது. ஈரான் நாட்டின் வட  கிழக்கு பகுதியில்  உள்ள தோப்ரிஸ் என்ற நகரில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் ஏற்பட்ட அடுத்த 11 நிமிடங்களில் மேலும் ஒரு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு பெரிய அதிர்வுகளை  அடுத்து 55 முறை லேசான பின் அதிர்வுகளும் ஏற்பட்டன. முதலில் ஏற்பட்ட பூகம்பம் 6.4 என்றும் இரண்டாவது ஏற்பட்ட பூகம்பம் 6.3 என்றும் ரிக்டர் அளவையில் பதிவாகி இருந்தது. இந்த இரு பூகம்பங்களின் காரணமாக கட்டிடங்கள் வீடுகள் இடிந்து விழுந்தன.  இந்த இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான பேர் பலியானார்கள். இதுவரை இந்த இரட்டை பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது. பூகம்பத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டிட இடுபாடுகளில் மேலும் பலர் உயிரோடு இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அந்த பகுதிகளில்  மீட்பு குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகளில் செஞ்சிலுவை  சங்கத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த  பூகம்பத்தினால் ஏராளமான பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் மேலும் நில அதிர்வுகள் ஏற்படுவதால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்து சமதள பகுதிகளில் தங்கியுள்ளனர். பூகம்பத்தின் காரணமாக தகவல் தொடர்பு  மற்றும்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 3ஆயிரம்  டென்ட்டுகள், போர்வைகள், மேலும்  உணவு பொருட்களும்  வினியோகம் செய்யப்பட்டு  வருகின்றன. பூகம்பத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஈரான் அதிபர்  முகம்மது அகமது  நிஜாத் தனது ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பூகம்பத்தில் வீடுகளை இழந்தவர்கள்
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் இன்னும் சிக்கியிருப்பவர்களை மீட்க ராணுவத்தினரும் முழு வீச்சில் ஈடுட்டுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago