முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடன்குளம் யுரேனியம் எரிபொருள் நிரப்பும்பணி இன்னும் பத்துநாட்களில் தொடங்கும்

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை,ஆக.- 13 - கூடன்குளம் முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி இன்னும் பத்து நாட்களில் தொடங்கும் என்று வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் தலா 1000 மெகாவாட் திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்டடுள்ளன. இதில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்க ஏதுவாக அதில் எரிபொருள் நிரப்பும் பணிக்கு முந்தைய முறைப்படியான ஆய்வுகள் கடந்த ஜுன் 30ந் தேதி தொடங்கப்பட்டன. இந்த ஆய்வு பணிகள்  2 வாரத்திற்கு மேற்கொள்ளப்பட்டு இந்திய அணுசக்தி  ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து 1வது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 10ந் தேதி அனுமதி அளித்தது.  இதனைத்தொடர்ந்து  அணு உலையில் யுரேனியம் எரிபொருள்  நிரப்பும் பணியை விரைவில் தொடங்க அதிகாரிகள் குழு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இது குறித்து கூடன்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியதாவது:-

முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்காக  காத்திருந்தோம். தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அணு உலையில் யுரேனியம்  எரிபொருள் நிரப்புவதற்கான பணிகளில் தீவிரமாக ்டுபட்டு வருகிறோம்.  இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் சில நிபந்தனைகளை செயல்படுத்துமாறு கூறியுள்ளது. அதன்படி  சில பணிகள் ம்ேறகொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்ததும் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்படும்.  அதன் அடிப்படையில் அவர்கள் ஆய்வை மேற்கொள்வார்கள்.  அதன் பிறகே யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கும். இன்னும் 10 நாட்களுக்குள் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கப்படும். இந்த பணி 10 முதல் 15 நாட்களுக்குள் முடிவடையும். பின்பு மின் உற்பத்திக்கான நிலைப்படுத்தப்பட்ட தொடர் வினை பணிகள் 5 கட்டங்களாக நடக்கும்.  இதன் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய அணுசக்தி  ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். முதல் அணு உலையில் செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago