முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா ரைடர்ஸ் வெளியேற்றம்

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

டர்பன், அக். 19 -  சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் டர்பன் நகரில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்ட ம் மழையால் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் போட்டி கைவிடப்பட்டதால் அந்த அணி வெளியேற்றப்பட்டது. 

கேப்டன் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கனவே முதல் இரண்டு லீக்கில் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் பின் தங்கி இருந்தது. 

சாம்பியன்ஸ் லீக்கில் டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் குரூப் ஏ யைச் சேர்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிகள் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர் வு செய்தது. பெர்த் அணி தரப்பில் ஷான் மார்ஷ் மற்றும் ஹெர்சிலி கிப்ஸ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணி 14 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்னை எடுத் து இருந்தது. அப்போது பலத்த மழை பெய்ததால் மைதானம் ஈரப்பதம் ஆனது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்ட து. இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிக ள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 

பெர்த் அணி தரப்பில், ஷான் மார்ஷ் 40 பந்தில் 38 ரன்னை எடுத்து இருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அட க்கம். சைமன் கேடிச் 32 பந்தில் 43 ரன் னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். 

தவிர, ஆர். மார்ஷ் 5 ரன்னுடன் களத்தி ல் இருந்தார். முன்னதாக கிப்ஸ் கணக் கைத் துவக்காமல் அவுட் ஆனார். கொல்கத்தா அணி சார்பில், பிரட்லீ 1 விக்கெட்டும், காலிஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

ஐ.பி.எல் . சாம்பியனான கொல்கத்தா அணி முதல் சுற்றிலேயே ரெளியேற்றப் பட்டது அந்த அணி வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த அணி கடைசி லீக்கில் விளையாட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago