முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேஸ்இணைப்பு: நவம்பர் 15 வரை கே.ஒய்.சி. படிவம் சமர்ப்பிக்கலாம்.

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது தில்லி, நவ.​- 1:​- சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்கள்,வாடிக்கையாளர் விவரம் (கேஒய்சி) அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளருக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஒரே பெயரில் அல்லது ஒரே முகவரியில் பெறப்பட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கேஸ் இணைப்புகளைக் கண்டறிந்து அதை ரத்து செய்ய எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டன. இதன்படி, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வாடிக்கையாளரிடமிருந்து பூர்த்தி செய்த கேஒய்சி படிவத்தை பெற்று, அதைச் சரிபார்த்து சமர்ப்பிக்குமாறு விநியோகஸ்தர்களுக்கு உத்தரவிட்டது. வாடிக்கையாளர்கள் தங்களிடம் கூடுதலாக உள்ள இணைப்பை விநியோகஸ்தரிடம் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைக்கத் தவறினால், ஆய்வின்போது ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் இருப்பது தெரியவந்தால், கூடுதல் இணைப்புகள் ரத்து செய்யப்படும். இந்நிலையில், விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago