முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் மனைவி எங்கே? காங்கிரஸ் சூடான கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ. 4 - குஜராத் முதல்வர் மோடி மீது காங்கிரஸ் கட்சி கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, இக்கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜயசிங் சூடான ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். மோடியின் மனைவி எங்கே? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், இந்த விஷயத்தில் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது மனைவி எங்கே இருக்கிறார் என்பதை மோடியே தெளிவுபடுத்த வேண்டும் என்றும் திக்விஜயசிங் கேட்டுக் கொண்டுள்ளார். தன் மனைவி யசோதா பற்றி ஏன் மோடி மவுனமாக இருக்கிறார். ஏன், மனைவியை மறைத்து வைத்திருக்கிறார். அவரை விவாகரத்து செய்து விட்டாரா? என்பதை மோடிதான் விளக்க வேண்டும் என்றும் திக்விஜயசிங் கேட்டுள்ளார். 

மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரைப் பற்றி மோடி குறிப்பிடுகையில், அவரை ரூ. 50 கோடி மதிப்பிலான பெண் தோழி என்று குறிப்பிட்டாராம். இதற்கு மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திக்விஜயசிங் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி சசிதரூரின் மனைவி பற்றி கிண்டலாக பேசினாராம். இது காங்கிரஸ் வட்டாரத்தில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால்தான் மோடியின் மனைவி யசோதா எங்கே போன்ற கேள்விகளை எல்லாம் காங்கிரஸ் கட்சி எழுப்ப தொடங்கி விட்டது. முன்பெல்லாம் பிரச்சாரம் நடந்தால் பொதுவான விஷயங்கள் பற்றி பேசுவார்கள். ஆனால் இந்த காலத்தில் அந்தரங்க விஷயங்களையும் கிண்ட தொடங்கி விட்டார்கள். இது எதில் போய் முடியுமோ தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago