தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலைபற்றி பேச பி.ஜே.பி.க்கு அருகதை இல்லை ஜெயந்திநடராஜன்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, நவ.- 19 - ஊழலை பற்றி பேச பி.ஜே.பி.க்கு அருகதை இல்லை என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேசினார். தமிழ்நாடு மகிளா காங்கிரசின் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி அனிதா வர்மா, மாநிலத் தலைவி சாய்லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேசியதாவது:- ஊழல் ஏழைகளைத்தான் தாக்குகிறது, பணக்காரர்களை தாக்கவில்லை. ஊழலை பற்றி பேச பி.ஜே.பி.க்கு தகுதி இல்லை. அந்த கட்சியில் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் ஊழல் வழக்கில் கைதாகி தற்போதுதான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். அடுத்து அக்கட்சியின் தலைவர் நிதின் கட்காரி உள்ளே செல்ல தயாராக உள்ளார். வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எண்ணை நிறுவனங்கள் கூடுதலான லாபம் அடைகின்றது. வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் என்பதை வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் என்று மத்திய அரசு கொடுக்க வேண்டும். 12 சிலிண்டர்கள் கொடுக்காவிட்டால் பெண்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். எனவே வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் கொடுக்க வேண்டும் என்று பெண்களின் சார்பில் பிரதமரிடம் நான் முறையிடுவேன். வரும் குளிர்கால கூட்டத் தொடரில் மகளிர் மசோதா கொண்டு வரப்படும். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விட்டால் கண்டிப்பாக மசோதா நிறைவேறும் என்றார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசும்போது, காங்கிரஸ் அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதனை தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு சிறு பிரசுரமாக போட்டு சோனியா காந்தியின் பிறந்த நாள் அன்று கிராமம் கிராமமாக வினியோகம் செய்வோம் என்றார். க்ச்ச்சி டூச்சிடீ நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு நிதி உதவிக்கான காசோலையை மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வழங்கியபோது எடுத்தபடம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago