முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபைக்கு 2-வது கட்ட தேர்தல் தேதி அறிவிப்பு

சனிக்கிழமை, 24 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

காந்திநகர்,நவ.24 - குஜராத் மாநில சட்டசபைக்கு 2-வது கட்ட தேர்தல் வரும் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.  குஜராத் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் ஜனவரி 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையொட்டி மாநில 182 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு முதல் கட்டமாக 87 தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்தநிலையில் 2-வது கட்டமாக 95 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்புமனுத்தாக்கல் நேற்றுமுதல் தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி. வேட்புமனு பரிசீலனை டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் வாங்க டிசம்பர் 3-ம் தேதியாகும். டிசம்பர் 17-ம் தேதி தேர்தல் நடைபெறும். டிசம்பர் 20-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும். டிசம்பர் 24-ம் தேதிக்குள் தேர்தல் பணிகள் முடிந்துவிடும். இரண்டு கட்ட தேர்தலிலும் 44 ஆயிரத்து 496 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் மொத்தம் 3 கோடியே 76 லட்சத்து 590 வாக்காளர்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago