முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதான 10 அரசியல் கட்சிகளுக்கு ரூ.2,500 கோடி வரிவிலக்கு

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 4 - நாட்டின் 10 பிரதான அரசியல் கட்சிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 2,500 கோடிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த ரமேஷ் வர்மா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றிருக்கும் கீழ்க்கண்ட தகவல்களை பெற்றுள்ளார். அதில் நாட்டில் உள்ள 10 முக்கிய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 2, 490 கோடிக்கு வரிவிலக்குடன் கூடிய நன்கொடை கிடைத்துள்ளது. இதில் 80 சதவீதம் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1385. 36 கோடி, பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ. 682 கோடி, ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு ரூ. 15.51 கோடி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ. 147.18 கோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 141.34 கோடி, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ. 85.61 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 28.47 கோடி, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ரூ. 7.16 கோடி, லோக் ஜனசக்தி கட்சிக்கு ரூ. 2.55 கோடி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிக்கு ரூ. 2.85 கோடி வரிவிலக்குடன் கூடிய நன்கொடை கிடைத்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago