முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சல் பிரதேசம் - குஜராத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 20  - சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு மத்தியில் நடக்கிறது. இன்று மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்து விடும். அப்போது இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெறப் போவது பாரதீய ஜனதாவா? அல்லது காங்கிரசா என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும். 

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. 

அதன்படி முதலில் இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. பிறகு குஜராத் மாநிலத்தில் கடந்த 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக கடந்த 13 ம் தேதியன்று 87 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது 70.75 சதவீத வாக்குகள் பதிவாயின. பிறகு 2 ம் கட்ட மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் கடந்த 17 ம் தேதியன்று 95 சட்டமன்ற தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த இறுதிக் கட்ட தேர்தலிலும் குஜராத் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர். நீண்ட கியூ வரிசையில் நின்று ஆண்களும், பெண்களும், முதியோர்களும் வாக்களித்தனர். இந்த தேர்தலுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிட்ட மணி நகர் தொகுதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள். தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்தார்கள். அதைப் போல் ஒரு சில அசம்பாவித சம்பவங்களை தவிர மற்றபடி இம்மாநிலத்தில் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது. 

முன்னதாக இந்த இரண்டு கட்ட தேர்தலிலுமே அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்தார்கள். மாநில முதல்வர் மோடி பம்பரமாக சுழன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் தனது 10 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தார். பா.ஜ.க. தலைவர்களும் அவருக்காக பிரச்சாரம் செய்தனர். 

இதே போல் காங்கிரஸ் தரப்பில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். இங்கு பிரச்சாரம் செய்த பிரதமர் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இப்படியாக விறுவிறுப்பாக நடந்த பிரச்சாரம் ஓய்ந்து கடந்த 17 ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா சார்பில் முதல்வர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ஆனந்தி பட்டேல், சவுரவ் பட்டேல், பிரபுல் பட்டேல், ஜெயநாராயணன் உள்ளிட்டோரும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா, அவரது மகன் மகேந்திர வகேலா உள்ளிட்டோரும் போட்டியிட்டனர்.  

முதல்வர் மோடியை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ்பட் மனைவி சுவேதாபட் களமிறங்கினார். முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் புதிய கட்சி தொடங்கியிருந்தார். இவரது கட்சியான குஜராத் பரிவர்த்தன் கட்சியும் தேர்தல் களத்தில் குதித்தது. இதனால் பாரதீய ஜனதாவின் ஓட்டுக்கள் பிரியும் என்று காங்கிரஸ் கட்சி கணக்குப் போட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் முதல்வர் மோடியே வெற்றி பெறுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. இதே கருத்தை முதல்வர் மோடியும் கூறியுள்ளார். 

தேர்தலில் வாக்களித்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மூன்றாவது முறையாக நான் ஆட்சியைப் பிடிப்பேன். எனது நல்லாட்சிக்கும், நான் ஏற்படுத்திய முன்னேற்றத்திற்கும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கையோடு கூறினார். ஒரு வேளை இவர் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்றால் அது இவருக்கு ஹாட்ரிக் சாதனையாகத்தான் இருக்கும். எது எப்படியோ இன்று மதியத்திற்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். அப்போது குஜராத்திலும் சரி, இமாச்சல் பிரதேசத்திலும் சரி, ஆட்சியைப் பிடிப்பது காங்கிரசா?அல்லது பா.ஜ.க.வா என்பது தெரிந்து விடும். வாக்குகள் எண்ணப்படுவதை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெறும். மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதால் முடிவுகள் 4 மணி நேரத்திற்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago