Idhayam Matrimony

மு.க.முத்து பேத்தி திருமணம்: கருணாநிதி நடத்தி வைத்தார்

புதன்கிழமை, 23 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன. 24 -​தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளு பேத்தியும், மு.க.முத்து-​ சிவகாம சுந்தரியின் மகள் வழி பேத்தியும், தொழில் அதிபர் சி.கே. ரங்கநாதன்-​ தேன்மொழி ஆகியோரின் மகளுமான அமுதவல்லிக்கும் தென் சென்னை போலீஸ் முன்னாள் இணை கமிஷனரும் திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.யுமான சண்முக  ராஜேஸ்வரன்-​சுமதி ஆகியோரின் மகன் சித்தார்த்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

நேற்று காலையில் ஈஞ்சம்பாக்கம் பாரதி அவென்வில் உள்ள கவின் சோலையில் திருமணம் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மணமக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர் மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசினார். திருமணத்தில் கருணாநிதி குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்றனர். 

மணமக்களை வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:-​

கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மத்திய அமைச்சர் மு.க.அழகரி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி எம்.பி., மு.க. தமிழரசு, செல்வி, முரசொலி செல்வம், அமிர்தம், கலாநிதி மாறன், காவேரி தயாநிதிமாறன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, nullங்கோதை, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் விக்ரம் மற்றும் பலர் வந்திருந்தனர். 

திருமணத்துக்கு வந்த அனைவரையும் மு.க.முத்து, போலீஸ் அதிகாரி சண்முக ராஜேஸ்வரன், தொழில் அதிபர் சி.கே. ரங்கநாதன், செல்வி ஆகியோர் முன்னின்று வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago