முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் கனமழை..!

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஜூன். 28 - கேரளாவில் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு கடந்த 1 ம் தேதி தொடங்கியது. இந்த மழை 27 நாட்களாக பெய்து வருகிறது. வழக்கத்தை விட மழையின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக இருந்ததால் பல இடங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது. 

ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை கேரளா முழுவதும் 93 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 53 செ.மீ. மழை தான் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக 42 செ.மீ. மழை பெய்துள்ளது. 22 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் தற்போதுதான் இந்த அளவுக்கு கனமழை பெய்துள்ளது. 

இதற்கு முன்பு கடந்த 91 ம் ஆண்டு கேரளாவில் இதே போல் கனமழை கொட்டியது. தற்போது பெய்து வரும் பருவ மழையின் வேகம் இன்னும் 2 நாட்களில் குறையும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதுவரை பெய்த மழையில் கேரளா முழுவதும் 1,829 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 181 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டை, காசாகோடு போன்ற பகுதிகள் மழையின் காரணமாக அதிக சேதத்தை சந்தித்துள்ளது. வலியத்துறை சிறையின் கீழ் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு கேரள அரசு ரேசன் மூலம் இலவச அரிசி வழங்கி வருகிறது. நெய்யாற்றின் கரை, பாறசாலை, பனிச்சமூடு பகுதிகளில் சூறாவளி காற்றால் மரங்கள் விழுந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago