முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் எங்கள் முதுகில் குத்தினாலும் கூட்டணிக்கு தயார்

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.28 - எங்கள் முதுகில் காங்கிரஸ் குத்தியபோதிலும் அந்த கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள தயார் என்று ஒய் எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி பிரிந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஜெகன்மோகன் மீது சொத்துக்குவிப்பு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இதனால் காங்கிரசும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் பாம்பும் கீரியும்போல் இருந்து வருகின்றன. இந்தநிலையில் திடீர் மாற்றமாக வரும் லோக்சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை என்று கட்சியின் தலைவர் ஜெகன்மோகனின் சகோதரி சர்மிளா ரெட்டி தெரிவித்துள்ளார். 

எங்கள் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது. அப்படி இருந்தாலும் வரும் லோக்சபை தேர்தலில் காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். இதற்கு காரணம் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். எங்களுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடு உள்ளது என்றும் சர்மிளா ரெட்டி இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். வருகின்ற லோக்சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியையோ அல்லது 3-வது அணியையோ நாங்கள் ஆதரிப்போம் என்றார். ஆந்திராவில் சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையை சர்மிளா ரெட்டி கடந்த ஞாயிறு அன்றுதான் முடித்தார். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிதான் இறுதி முடிவு எடுப்பார். 

தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இழந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் ஓய்.எஸ்.ஆர். கட்சிக்கும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கும் சென்றுகொண்டியிருக்கிறார்கள். இந்தநேரத்தில் சர்மிளா ரெட்டி கூறியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆந்திராவில் கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றிபெறுவதற்கு என்னுடைய தந்தை ராஜசேகர ரெட்டி பெரும் தொண்டாற்றினார். ஆனால் அந்த நன்றியை காங்கிரஸ் மறந்துவிட்டது என்று சர்மிளா ரெட்டி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago