முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நிதியமைச்சருடன் ப.சிதம்பரம் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை. 15 - அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அந்நாட்டு நிதியமைச்சர் ஜேக்கப் ஜேலீவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

வாஷிங்டனில் முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்புக்கு சிதம்பரம் மேற்கொண்ட முயற்சிகளை ஜேக்கப் வரவேற்றார். மேலும் இந்திய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு வலுவடைய  மேலும் உதவும் என்றும் அவர் தெரிவித்ததாக அந்நாட்டு நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இரு நாடுகளில் நிலவும் பொருளாதார தன்மை குறித்து சிதம்பரத்திடம் ஜேக்கப் விரிவான ஆலோசனை நடத்தினார். வரும் 19 மற்றும் 20 ம் தேதிகளில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுனர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் பொருளாதார கொள்கைகளில் எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்தும் சிதம்பரத்துடன் ஜேக்கப் கலந்துரையாடினார். 

பயங்கரவாதிகளிடம் நிதி சென்றடைவதை தடுக்கும் வகையில் இரு நாடுகள் மேற்கொண்ட அன்னிய செலாவணி பரிவர்த்தனை தடை ஒப்பந்தம் குறித்தும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்து கொண்டதையும் அவர் வரவேற்றார். கடந்த நான்கு நாட்களாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரை சிதம்பரம் சந்தித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago