முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 வாரங்களில் வெங்காய விலை குறையும்: சரத்பவார்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, செப். 21 - மகராஷ்டிரம் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து காரிப் சாகுபடி வெங்காயம் விரைவில் வரவிருப்பதால் அதன் விலை குறைய தொடங்கும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மகராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் வெங்காயத்தை பதுக்கி வைப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் கே.வி. தாமசுடன் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் புது டெல்லியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், 

அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை நிலையாக இருந்தாலும் வெங்காயத்தின் விலை உயர்வு பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்து விட்டது. விலையை கட்டுப்படுத்த ஓரளவு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வெங்காய ஏற்றுமதிக்கு குறைந்தபட்ச விலை மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

வெங்காயம் விலை உயர்வுக்கு கனமழையே காரணம். ஆந்திர பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் காரிப் பருவ வெங்காய அறுவடை தொடங்கி விட்டது. இருப்பினும் மழை காரணமாக அவற்றை டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது. 

மழை  காரணமாக மகராஷ்டிர மாநிலம் நாசிக் உள்ளிட்ட இடங்களில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் காரிப் சாகுபடி வெங்காய வரத்து விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் வெங்காயத்தின் விலை குறையும் என்று சரத்பவார் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago