முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவர்களை கடத்தி சிறையில் உள்ளவர்களை மீட்க திட்டம்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.17- டெல்லியில் தலைவர்களை கடத்த தீவிரவாதி கள் திட்டம் தீட்டியுள்ளனர் எனவே கவனமாக இருக்குமாறு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  பாகிஸ்தான் ஆக்கிரமிப் காஷ்மீரில் லஷ்கர்_இ_தொய்பா தளபதியாக இருப்பவன் ஜாவித் பலாசி. இவனது நடவடிக்கைகளையும், டெலிபோன் பேச்சுக்களையும் கடந்த சில மாதங்களாக மத்திய உளவுத் துறையினர் கண்காணித்து வந்தனர். 

டெல்லி, ராஜஸ்தான், அரியானா உத்தரபிரதேசத்திலுள்ள சிலருடன் ஜாவித் பேசி வந்துள்ளான். இதை உளவுத் துறையினர் கண்டு பிடித்தனர், இதையடுத்து நடத்திய வேட்டையில் அரியானிவில் உள்ள மேலட் பகுதியில் கடந்த வாரம் முகமது ஷாகித் என்ற தீவிரவாதி பிடிபட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடத்திய போது, டெல்லியில் முக்கிய அரசியல் வாதிகளை கடத்தி செல்ல லஸ்கர்_இ_ தொய்பா தீவிரவாதிகள் திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இந்த கடத்தல்  திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பொறுப்பை லஷ்கர் இ தொய்பா  மூத்த தலைவர் ஜாவித்திடம் ஒப்படைத்து இருப்பது தெரிய வந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மிக முக்கிய தலைவர்களை கட்த்த ஜாவித் திட்டமிட்டிருந்தான். இதற்காக டெல்லி புறநகர் பகுதியில் உள்ள பலருடன் பேசிய அவன் இதற்காக தனி நெட்ஒர்க்கை உருவாக்கி இருக்கிறான். இந்த சதி திட்டம் உளவுத் துறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. முக்கிய அரசியல் தலைவர்களை கடத்தி பிணைக் கைதிகளாக வைத்து சிறைகளிலுள்ள தீவிரவாதிகளை விடுவிக்க கெடு விதிக்க முடிவு செய்திருந்தது தெரியவந்துள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago