முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி அரேபிய இளவரசருக்கு மரண தண்டனை?

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

துபாய், டிச.31 - சவூதி அரேபிய இளவரசருக்கு மரண தண்டனை  வழங்கப்பட உள்ளதாக அங்கிருந்து வெளிவரும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் நாடான சவூதி அரேபியாவில் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இங்கு கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு மரண் தண்டனை போன்ற கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நாட்டில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவான சட்டம் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மரண் தண்டனை என்பது அரச குடும்பத்தி னருக்கும் உண்டு. இதிலிருந்து அவர்கள் தவறு செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது தற்போது நிரூபிக் கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையில் கொலை வழக்கில் இளவரசருக்கு மரண் தண்டனை என்ற செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இளவரசர் யார் என்பது வெளியிடப்படவில்லை. 

அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர் சாதாரண குடிமகன் ஒருவரை கொலை செய்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு கொடுத்தால் மரண தண்ட னையிலிருந்து தப்பி விடலாம். ஆனால் கொலை செய்யப்பட்டவரின் தந்தை நஷ்ட ஈடு பணத்தை வாங்க மறுத்து விட்டார். எனவே இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது.

இதை பட்டத்து இளவரசர் உறுதி செய்துள்ளார். இதுபற்றி உள்துறை மந்திரியும், இளவரசருமான முகமதுபின் நயப்புக்கு எழுதிய கடிதத்தில்  இஸ்லாமிய சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இதில் யாருக்கும் விதி விலக்கு கிடையாது. பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரன்  என்ற பாகுபாடு கிடையாது. எனவே இந்த சட்டத்தில் யாரும் தலையிட அனுமதிக்க மாட்டோம். இது நமது நாட்டின் கலாச் சார சட்டம் என்று தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago