முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸில் காம்பிர் - நரைன்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஜன-6 - வரும் ஐபிஎல் தொடருக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, காம்பிர் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரையும் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. அந்த அணிக்கு மீண்டும் கௌதம் காம்பிர் தலைமையேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடிய காம்பிர், நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா அணியில் 2011 ஆண்டு முதல் ஆடிவருகிறார். காம்பிர் தலைமையில் தான், 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை, அந்த அணி வென்றது. 2013-ஆம் வருடத் தொடர் கொல்கத்தா அணிக்கு மோசமானதாக அமைந்தாலும், காம்பிரை தக்க வைக்க அணியின் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். காம்பிர் இதுவரை 88 ஐபிஎல் போட்டிகளில் 2471 ரன்கள் எடுத்துள்ளார்.

அதே போல, ஐபிஎல் வீரர்களுக்கு மத்தியில், இன்றளவும் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவு, பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் மேற்கிந்திய தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனும் கொல்கத்தா அணியில் மீண்டும் இடம் பெறுகிறார். இது பற்றி ஐபிஎல் நிர்வாகி ஒருவர் பேசுகையில், "ஆம், வரும் ஐபிஎல் தொடருக்கு காம்பிர் மீண்டும் அணியில் இடம் பெறுவார். அவர் கொல்கத்தா அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி வந்துள்ளார். அவரை கேப்டன் ஆக்குவது ஐபிஎல் போடிகளில் அவர் தொடர்ந்து செயல்பட உதவிகரமாய் இருக்கும். கொல்கத்தா அணியின் ரசிகர்கள், காம்பிரையும், அணியையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். சுனில் நரைனை பொருத்தவரை, எங்கள் அணிக்கு அவர் சாம்பியனாக இருந்து வருகிறார். அவரது விக்கெட் எடுக்கும் திறமை மற்றும் அவரது சராசரியே போதும் அவரைப் பற்றி பேச" என்றார்.

2014-ஆம் ஆண்டு ஐபிஎல் அணி வீரர்களுக்கான ஏலம், பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago