முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் லஞ்சப் புகாரில் சிக்கிய 576 அதிகாரிகள் நீக்கம்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2014      ஊழல்
Image Unavailable

 

பாட்னா, ஜன.17 - பீகாரில் லஞ்சப் புகாரில் சிக்கிய 576 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அந்க மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்  தனது அதிரடி நடவடிக்கையால் பரபர ப்பாக பேசப்படப்படுகிறார். அவரைப்  போல் ஊழலை ஒழிக்கும் முயற்சியில்  மற்ற மாநில முதல்வர்களும்  செயல்படத் தொடங்கியுள்ளனர்.

   தற்போது கெஜ்ரிவால் போல் நற்பெயர் எடுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கருதுகிறார். முதல் கட்டமாக அவர் ஊழல் அதிகாரிகளை களையெடுக்க திட்டமிட்டுள்ளார். பீகாரில் 576 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இவர்களில் 187 பேர் மீது இலாகா பூர்வ நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. புகாருக்கு ஆளான 576 பேரையும் நீகிக நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். 

இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலர் சின்கா மற்றும் அதசிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்னும் ஒரு வாரத்தில் ஊழல் புரிந்த 576 அதிகாரிகளும் நீக்கப்ப டுகிறார்கள். இதற்கான இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்ததும் மற்ற நடவடிக்கைகள் தொடங்கும். அரசு அலுவலகங்களில் அனைத்து மட்டத்தி லும் ஊழலை ஒழிக்க நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார்.

 இதசற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு தலைமைச் செயலாளர் மூலம் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.  அவர்களுடன் தலைமைச் செயலாளர் வீடியோகான்பரன்சிங் மூலம் பேசினார்.  பீகாரில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் , தாலுகா அதிகாரிகள் மீதுதான் அதிக அளவில் புகார் வந்துள்ளன, இதில் சிலர் மட்டுமே சிக்குகிறார்கள். பலர் தப்பித்து விடுகின்றனர் என்று தலைமை செயலாளர் தெரிவித்தார்.

இதேபோல் போலீஸ் துறையிலும் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை  எடுக்கப் பட்டு வருகிறது. போலீஸார் லஞ்ச  ஊழல்  வழக்கில்  சிக்கினால் உடனடியாக அவர்கள் டசிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago