முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள்: அமைச்சர் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2014      தமிழகம்

 

தஞ்சாவூர், ஜூன்.9 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 67 ஆயிரத்து 850 மதிப்பிலான உபகரணங்களை  வழங்கினார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன தலைமை வகித்தார். 

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க அமைச்சர் பேசியதாவது, 

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக 42 வகையான திட்டங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ-4.25 இலட்சம் மதிப்பில் 80 நபர்கள் பயனடைந்துள்ளனர்.  மனவளர்சி குன்றியோர், கடுமையாக இயலாதோர், தசைசிதைவு நோயால்  பாதிக்கப்பட்டோர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என 4 வகையான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1495.00 இலட்சம் மதிப்பில் 4509 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.48.00 இலட்சம் மதிப்பில் 2054 எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளி மாணவஃமாணவிகள் பயனடைந்துள்ளனர். பார்வையற்றோர்களுக்கான வாசிப்பாளர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.28 இலட்சம் மதிப்பில் 77 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று நிலைகளைப்பெற்ற கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் மாணவஃமாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 3.16 இலட்சத்தின் 18 நபர்கள் பயனடைந்துள்ளனர். 

கை, கால் பாதிக்கப்பட்டோர் காதுகோளாதோர் வாய்பேச இயலாதோர் கண்பார்வையற்றோர்களை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபர்கள் திருமண உதவித்திட்டம், மற்றும் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்துக்கொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு திருமணநிதியுதவி திட்டம் என நான்கு வகையான திட்டங்களின் கீழ் ரூ. 19.50 இலட்சம் மதிப்பில் 112 தம்பதியினர்கள் பயனடைந்துள்ளர். இலவச பேருந்து பயணச ;சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.721.00 இலட்சம் மதிப்பில் 1935 நபர்கள் பயடைந்துள்ளனர். 

மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் பயிற்சி,கணினி பயிற்சி,ஆய்வுக்கூட பயிற்சிகள் போன்ற பயிற்சிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.42 இலட்சம் மதிப்பில் 51 நபர்கள் பயனடைந்துள்ளனர். 6 வயதுக்குட்பட்ட காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகள், மன வளர்ச்சி குன்றிய, மற்றும் கண் பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 11.70 இலட்சம் மதிப்பில்  330 சிறப்பு குழந்தைகள்  பயனடைந்துள்ளனர். 

14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் வாயிலாக ரூ 18.70 இலட்சம் மதிப்பில்  120 நபர்கள் பயனடைந்துள்ளனர். 

மன வளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் பணிப்புரியும் சிறப்பாசிரியர்களுக்கு மதிப்புூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 17.42  இலட்சம் மதிப்பில் 100 சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்கள் பயனடைந்துள்ளனர்.  

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ரூ. 500000 மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 90.00 லட்சம் மதிப்பில் 3200 நபர்கள் உபகரணங்கள் பெற்று பயனடைந்துள்ளனர். 

பொது பிரிவின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி, செயற்கை அவயங்கள், முடநீக்கியல் சாதனங்கள், பார்வை யற்றோருக்கான மடக்கு ஊன்றுக்கோல், காது கேளாதோருக்கான காதொலி கருவிகள், மோட்டார் பொருதிய தையல் இயந்திரங்கள் போன்ற திட்டங்களின்; வாயிலாக ரூ 43.38 லட்சம் மதிப்பில் 938 நபர்கள் பயனடைந்துள்ளனர். 

2011ம் ஆண்டு முதல் 4784 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் 1414 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2011ம் ஆண்டு முதல் இது வரை ரூ.18 கோடியே 53 லட்சம் 26 ஆயிரத்து 351 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் இது வரை 33 ஆயிரத்து 291 நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. விழாவில் 75 நபர்களுக்கு ரூ.7 இலட்சத்து 67 ஆயிரத்து 850 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .  

தொடர்ந்து விழாவில் மீன்வளத் துறை சார்ப்பில் 23 மீனவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.46 ஆயிரத்திற்கான உதவி தொகைகளையும்,  தீண்டாமை கடைப்பிடிக்காத மத நல்லிணக்கத்துடன் வாழும் மாவட்ட அளவில் சிறந்த கிராமத்திற்கான பரிசுத்தொகை ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை பாபநாசம் ஒன்றியம், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் .க.ஜெய்சங்கர்pடமும் மேலும்,  ஒரத்தநாடு வட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த .டி.சுமதி-தென்னரசு தம்பதியினருக்கு முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டு பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும் பிறந்த நிகழ்வினை சிறப்பினமாக கருதி முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தை ரூ.15 ஆயிரத்து 200 வீதம் 5 குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக ரூ.76ஆயிரத்திற்கான பத்திரங்களையும் அமைச்சர் வழங்கினார்.

விழாவில் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, (தஞ்சாவூர்), எம்.ரெத்தினசாமி (திருவையாறு), மாநகராட்சி மேயர் .சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சி தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், நிலவள வங்கி தலைவர் .துரை வீரண்ணன், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் .ரவிச்சந்திரன், நகர் மன்ற உறுப்பினர் சண்முகபிரபு, அரசு வழக்கறிஞர் தங்கப்பன், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago