முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது குடும்பம் முழுவதையும் கைது செய்ய இலங்கை அரசு நடவடிக்கை: ராஜ பக்‌ஷே புலம்பல்

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையில் ஆட்சி  செய்து வரும் மைத்ரி பால சிறி சேனாவின் அரசு எனது குடும்பம் முழுவதையும் விசாரணைக்கூண்டில் ஏற்றும் என்ற அச்சம் நிலவுகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்‌ஷே கூறினார்.இலங்கையில் ராஜ பக்‌ஷே ஜனாதிபதியாக இருந்தபோது அவரது சகோதரர் பசில் ராஜ பக்‌ஷே பொருளாதார மேம் பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். அதேப்போன்று அவரது இன்னொரு சகோதரர் கோத பய ராஜ பக்‌ஷே பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தார். இந்த இருவர் மீதும் தற்போதைய சிறிசேனா அரசு ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரணை செய்து வருகிறது.

பசில் ராஜ பக்‌ஷே தலைநகர் கொழும்புவில் ரிமாண்ட் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேப்போன்று கோத பய ராஜ பக்‌ஷேயிடம் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்து வருகிறது.அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.பசில் ராஜபக்‌ஷே கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜ பக்‌ஷே தனது குடும்பம் முழுவதையும் கைது செய்வார்கள் என்ற அச்சம் உள்ளது என தெரிவித்துள்ளார்.ராஜ பக்‌ஷேவின் மகன் நமல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ராஜபக்‌ஷேவின் மற்றொரு மகன் யோஷிதா ஆவார்.தற்போதைய இலங்கை அரசு கோத பய ராஜ பக்‌ஷே,நிமல்,யோஷிதா மற்றும்  என்னை(மகிந்தா ராஜ பக்‌ஷே) விசாரணை நடத்தி கைது செய்யும் என்ற அச்சம் உள்ளது என ராஜ பக்‌ஷே தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து