முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணியில் வேக பந்துவீச்சாளர் வீரர் அல்ஜரி ஜோசப் அறிமுகம்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

கிங்ஸ்டன் : இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதான புதுமுக வேகப்பந்து வீரர் அல்ஜரி ஜோசப் அணியில் இடம் பெற்றுள்ளார்.

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மே.இ.தீவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா-மே.இ.தீவுகள் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டலில் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதான புதுமுக வேகப் பந்து வீரர் அல்ஜரி ஜோசப் அணியில் இடம் பெற்றுள்ளார்.

முதல் டெஸ்ட்டில் இந்தியா ரன்களை குவித்தது. இதை கட்டுப்படுத்தும் விதமாக மே.இ.தீவுகள் அணி புதுமுக வீரரை தேர்வு செய்து உள்ளது. ஜோசப் இந்த ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை போட்டியில் 13 விக்கெட் கைப்பற்றி இருந்தார். மற்றபடி அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

2-வது டெஸ்ட்டில் விளையாடும் மே.இ.தீவுகள் அணி வீரர்கள் விவரம் :
ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிரசாத் வெயிட், ராஜேந்திர சந்திரிகா, டாரன் பிராவோ, சாமுவேல்ஸ், பிளாக்வுட், ரோஸ்டன் சேஸ், டவரிச் (விக்கெட் கீப்பர்), சார்லோஸ் பிராத் வெயிட், தேவேந்திர பிஷு, கேப்ரியல், லியான் ஜான்சன், கும்மினஸ், அல்ஜாரி ஜோசப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago